செய்வினையே வச்சிருந்தாலும் இந்த கார் உங்களுக்கு துணையா நிற்கும்.. 2024ம் ஆண்டின் ஆக சிறந்த பாதுகாப்பான கார்கள்
இந்த பதிவில் பயணத்தின்போது அதிக பாதுகாப்பை வழங்கக் கூடிய கார் மாடல்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மிக முக்கியமாக 2024 ஆம் ஆண்டில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) ஆகியவற்றால் பாதுகாப்பு திறன் குறித்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, இவை பாதுகாப்பானவை என கூறப்பட்ட இந்தியாவிற்கான கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இந்த கார்கள் அனைத்தும் சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், எதிரி என யார் வேணாலும் சூன்யமே வைத்திருந்தாலும் விபத்துகளின்போது உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்திய சாலைகளில் பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றது. குறிப்பாக, வாகனங்களின் கட்டுக்கடங்கா எண்ணிக்கை, போக்குவரத்து விதமீறல்கள் உள்ளிட்டவையே விபத்துகள் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்க காரணமாக உள்ளது. இந்த மாதிரியான சூழலில் பாதுகாப்பான கார்களின் தேவை மிகுந்த அவசியமானதாக உள்ளது. இதற்குகந்த கார்களே கீழே நாம் பார்க்க இருக்கும் மாடல்கள் ஆகும்.

நடப்பு 2024 ஆம் ஆண்டில் குளோபல் என்சிஏபி பலதரப்பட்ட கார் மாடல்களை அதன் பாதுகாப்பு திறன் குறித்து அறிந்துக் கொள்ளும் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. அதில், 6 கார் மாடல்களே இந்தியாவிற்கானவை ஆகும். இந்த ஆறு கார் மாடல்களில் இரண்டு மட்டுமே அதிகபட்ச பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன.
அவை மாருதி சுஸுகி டிசையர் (Maruti Dzire), டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon) ஆகும். குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு மாருதி சுஸுகி டிசையரின் பாதுகாப்பு திறன் உள்ளது. இது யாருமே நம்பிராத வகையில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையே குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் குவித்திருக்கின்றது.

இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்திற்கு கிடைத்த ஸ்டார் ரேட்டிங் ஆகும். சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் நல்ல ஸ்டார் ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றது. ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் எனும் பாதுகாப்பு ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது. இதேபோல், குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் டாடாவின் மிக முக்கியமான தயாரிப்பான நெக்ஸான்-ம் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த கார் உலகையும் மிரட்டி விட்டது.
அது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்கள் விஷயத்திலும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையேப் பெற்றது. நெக்ஸான்-இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனே இத்தகைய அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு முந்தைய வெர்ஷனும் பாதுகாப்பு விஷயத்தில் கெட்டிக்காரன் என்பது கவனிக்கத்தகுந்தது. 5க்கு 5 ஸ்டார்களையே அதுவும் பெற்றது.

இந்த இரண்டை தவிர குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்திய மற்ற நான்கு கார் மாடல்களும் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், சிட்ரோன் இசி3 (Citroen eC3)
இருப்பதிலேயே மிக மோசமான ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது. அது ஐந்துக்கு பூஜ்ஜியம் ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றது.
தொடர்ந்து, ஹோண்டா அமேஸ்-இன் முந்தைய தலைமுறை (Honda Amaze - Old Version) இரண்டு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையும், மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) 2 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையும், கியா கேரன்ஸ் (Kia Carens) மூன்று ஸ்டார்களை பெரியவர்கள் விஷயத்திலும், ஐந்து ஸ்டார்களை சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் பெற்றது.
குளோபல் என்சிஏபி-யை அடுத்து இப்போது இந்தியாவிற்கான கார்களை இந்தியாவே பாரத் என்சிஏபி வாயிலாக மோதல் ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றது. அந்தவகையில், குளோபல் என்சிஏபி முதன் முதலில் டாடாவின் தயாரிப்புகளையே மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. சஃபாரி (Safari) மற்றும் ஹாரியர் (Harrier) ஆகியவையே அவை ஆகும். இவை இரண்டும் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த தரமானவை என்கிற சான்றையே பாரத் என்சிஏபி இடமிருந்து பெற்றன.
ஆனால், இந்த நற்சான்றை அவை சென்ற 2023 ஆம் ஆண்டிலேயே பெற்றுவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஆண்டில் அது மஹிந்திர தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx), மஹிந்திர எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), மஹிந்திர எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV), ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson), சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) ஆகிய கார் மாடல்களையே அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது.
இது மட்டுமல்ல டாடாவின் சில தயாரிப்புகளையும் அது 2024 ஆம் ஆண்டில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. கர்வ் (Tata Curvv), கர்வ் இவி (Tata Curvv EV), நெக்ஸான் (Tata Nexon), நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் பஞ்ச் இவி (Tata Punch EV) ஆகிய கார் மாடல்களையே அது இந்த ஆண்டில் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தியது.
இந்த அனைத்து கார் மாடல்களிலும் சிட்ரோன் பசால்ட்-டை தவிர மற்ற அனைத்து கார் மாடல்களும் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களையேப் பெற்றிருக்கின்றன. பசால்ட்டும் ஓரளவிற்கு போதுமான பாதுகாப்பு ரேட்டிங்கையே பாரத் என்சிஏபியிடமிருந்து பெற்றிருக்கின்றது. அது பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர்களுக்குமான பாதுகாப்பு விஷயத்திலும் ஐந்துக்கு நான்கு ஸ்டார்களையே பெற்றிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அதிக பாதுகாப்பு மிக்க அதேவேளையில், பாதுகாப்பு தரம் குறைவான கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். 2024 ஆம் ஆண்டில் மட்டும் பாதுகாப்பானவை என்கிற தர சான்றை பெற்ற கார் மாடல்களின் லிஸ்ட் மட்டுமே இந்த பதிவில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதை மீண்டும் ஒரு முறை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









