2024 இல் விற்பனைக்கு வந்ததிலேயே இந்த காருதான் அதிக மைலேஜை தர கூடியதா!.. பைக்கை போல மைலேஜை தந்துட்டு இருக்கா!!
2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்ததிலேய அதிகம் மைலேஜ் தரக் கூடிய சிஎன்ஜி (CNG) கார் மாடல் எது என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஆண்டின் இறுதியை முன்னிட்டு இந்த பதிவை தொகுத்து வழங்கி இருக்கின்றோம். மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தன்னுடைய முன்னணி கார் மாடல்கள் பலவற்றில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய டிசையர் (Dzire) கார் மாடலிலும் அது சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குகின்றது.
இதுவே இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்த சிஎன்ஜி கார் மாடல்களிலேயே அதிக மைலேஜை வழங்கக் கூடியதாக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோ சிஎன்ஜிக்கே அதிகபட்சமாக 33.73 கிமீ வரையில் மைலேஜை தரும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அராய்-ம் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி ஆப்ஷனை டிசையரின் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே வழங்குகின்றது. இரண்டும் நடுநிலை வேரியண்டுகள் ஆகும். கியர்பாக்ஸை பொருத்த வரை மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே இரண்டு வேரியண்டுகளிலும் வழங்கப்படுகின்றது. இதில் இசட்எக்ஸ் சிஎன்ஜி ரூ. 9.85 லட்சம் என்கிற விலையிலும், விஎக்ஸ்ஐ சிஎன்ஜி ரூ. 8.74 லட்சம் என்கிற விலையிலும் விற்கப்படுகின்றது.
இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இதேபோல், புதிய டிசையர் கார் மாடலின் பெட்ரோல் வெர்ஷனும் அதிகம் மைலேஜைத் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், அது லிட்டர் ஒன்றிற்கு 25 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை அது வழங்கும். மைலேஜ் தருவதில் மட்டுமல்ல இந்த கார் பாதுகாப்பு தருவதிலும் தலைசிறந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது.

குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் மாடல் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்து அசத்தி இருக்கின்றது. மாருதியின் தயாரிப்பு இந்த அளவு அதிக பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியமளிக்கும் தகவல் ஆகும்.
இதேபோல், பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட ஸ்மார்ட் ப்ளே ப்ரோ அம்சம், ஆட்டோ கியர்ஷிஃப்ட் தொழில்நுட்பம் மற்றும் சுஸுகி கன்னெக்ட் உள்ளிட்ட அம்சங்களையே இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் ஒரே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட்12இ பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 80 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இதன் சிஎன்ஜி தேர்விற்கு அதிகம் மைலேஜை விரும்புவோர் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் அளவிற்கு அதிகம் மைலேஜைத் தரக் கூடிய சிஎன்ஜி கார் மாடல் வேறு எதுவும் சந்தையில் தற்போது போட்டியில் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
குறிப்பாக விலையிலும் மற்றும் பாதுகாப்பிலும் பெஸ்ட்டாக இருப்பது அக்கார் மாடலுக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக டிசையர் மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு போட்டியளிக்கும் விதமாக ஹோண்டா அதன் அமேஸ் புதிய தலைமுறையை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








