பென்ஸ் கார்கள் என்றாலே பணக்காரர்கள் மட்டும்தான் வாங்கிட்டு இருந்தாங்க! இப்போது ரேஞ்சே மாறிடுச்சி!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-benz), ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட லக்சரி கார் நிறுவனங்களுள் மெர்சிடிஸ்-பென்ஸ் ஒன்றாகும். இத்தகைய நிறுவனத்திற்கு நமது இந்தியா முக்கியமான சந்தைகளுள் ஒன்றாகும். ஏனெனில், இந்தியாவின் நம்பர் ஒன் லக்சரி கார் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. அதாவது, அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் கார்களை அசால்ட்டாக இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள மெர்சிடிஸ் கார்களின் எண்ணிக்கை ஆகும்.
இந்தியாவில் சுமார் 30க்கும் அதிகமான கார் மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் பல்வேறு புதிய கார்களை தொடர்ச்சியாக மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நிறைவடைய உள்ள இந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்63 இ பெர்ஃபார்மன்ஸ் & சி63 எஸ் இ பெர்ஃபார்மன்ஸ் (Mercedes-AMG S63 E Performance & C63 S E Performance): இந்த 2024ஆம் ஆண்டு மே மற்றும் நவம்பர் மாதங்களில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்த இரு செயல்திறன்மிக்க கார்கள் இவை ஆகும். இவை இரண்டுமே பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) கார்கள் ஆகும். இதில், சி63 எஸ் மாடல் அளவில் சற்று சிறியதாகவும், அதேபோல் விலை குறைவானதாகவும் விளங்குகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் (Mercedes-Benz CLE Cabriolet): பிரபலமான மெர்சிடிஸ் சி-கிளாஸ் காரின் டிராப்-டாப் வெர்சனாக சிஎல்இ கேப்ரியோலெட் கார் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் கிட்டத்தட்ட சி-கிளாஸ் காரை போன்று இருந்தாலும், இதில் 2 கதவுகள் மட்டுமே உள்ளன. இந்த கன்வெர்டிபிள் (Convertible) காரினுள் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்சி43 கூபே (Mercedes-AMG GLC43 Coupe): மேலே கண்ட சிஎல்இ கேப்ரியோலெட் காருடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட கூபே-ஸ்டைல் கார் இதுவாகும். இருப்பினும், இது ஏஎம்ஜி கார் என்பதால், அதற்கேற்ற பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.எஸ் (Mercedes-Benz EQS): மெர்சிடிஸ் இந்த வருடத்தில் அறிமுகம் செய்த மற்றொரு எலக்ட்ரிக் கார் இதுவாகும். ரூ.1.41 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய எலக்ட்ரிக் பென்ஸ் காரில் கனெக்டட் எல்இடி டி.ஆர்.எல்-கள், பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் மற்றும் கனெக்டட் எல்இடி டெயில்லைட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ கிளாஸ் லாங் வீல்பேஸ் (Mercedes-Benz E Class Long Wheelbase): இந்தியாவில் இந்த வருடத்தில் கடைசியாக அறிமுகம் செய்யப்பட்ட பென்ஸ் கார்களுள் இதுவும் ஒன்றாகும். வழக்கமான இ கிளாஸ் காரை காட்டிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கூடுதல் லக்சரியான கேபின் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பென்ஸ் காரில் இரு டர்போ பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய கார்களுடன், ஏற்கனவே விற்பனையில் உள்ள சில கார்களையும் இந்த 2024ஆம் வருடத்தில் மெர்சிடிஸ் நிறுவனம் சிறிது அப்டேட் செய்தது. கடந்த மற்ற எல்லா வருடங்களை போலவே இந்த 2024ஆம் வருடமும் மெர்சிடிஸ் நிறுவனத்துக்கு சிறந்த வருடமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், புதிய 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்கும் ஏற்கனவே சில புதிய கார்களை மெர்சிடிஸ் தயார் செய்துவிட்டது.


Click it and Unblock the Notifications









