இவ்வளவு சின்ன வயதில்... இதெல்லாம் சாதனைங்க!! இளம் யூடியூப்பரின் புது மஹிந்திரா கார்!

யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிட்டால், எளியதாக புதியதாக கார் வாங்கலாம் போல... ஏனெனில் சமீப காலமாக, இன்ஃப்ளூயன்சர் என அழைக்கப்படும் இத்தகைய நபர்கள் புதியது, புதியதாக கார்களையும், பைக்குகளையும் அதிகளவில் வாங்குவதை நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வரிசையில், கன்னட யூடியூபர் ஒருவர் இளம் வயதிலேயே விலையுயர்ந்த மஹிந்திரா காரை வாங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளார். யார் இந்த கன்னட யூடியூப்பர்? மஹிந்திராவில் எந்த காரை இவர் வாங்கியுள்ளார்? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யூடியூபில் பதிவிடப்படும் வீடியோக்களின் எண்ணிக்கைக்கு இணையாக வீடியோவை பதிவிடுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யூடியூப்பில் பதிவிடும் வீடியோக்களை அப்படியே இன்ஸ்டாகிராமிலும் பதிவிடுவதால், இன்ஸ்டாவிலும் விரைவாகவே நிறைய பேர் பிரபலமாகி உள்ளனர். இதில் 'விரைவாகவே' என்கிற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி கூற வேண்டும். ஏனெனில், யூடியூப்பிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரபலமாக இருப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இளம் வயதினராவர்.

kannada youtuber buys mahindra xuv700

நம் தமிழ்நாட்டில் கோபி- சுதாகர், மதன் கௌரி என இருப்பவர்களை போல், கர்நாடகாவில் பிரபலமாக இருப்பவர், சாம் சமீர். தினந்தோறும் தவறாமல் யூடியூப்பிலும், இன்ஸ்டாகிராமிலும் வீடியோக்களை பதிவிடும் சாம் சமீருக்கு யூடியூப்பில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மறுப்பக்கம், இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 6 லட்சத்து 22 ஆயிரம் பேர் பின்பற்றுகின்றனர்.

இந்த நிலையில் சாம் சமீர் புதியதாக விலையுயர்ந்த மஹிந்திரா காரை வாங்கியுள்ளார். சாம் சமீர் வாங்கியிருப்பது மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற அளவில் பெரியதான எஸ்யூவி கார் ஆகும். அடர் கருமை நிறத்தில் எக்ஸ்யூவி700 காரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சாம் சமீர் டெலிவிரி எடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

kannada youtuber buys mahindra xuv700

மஹிந்திரா ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காரின் நியூ ஜென்ரேஷன் காராக கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் எக்ஸ்யூவி700 காரை அறிமுகப்படுத்தியது. மஹிந்திராவின் புதிய பட்டாம்பூச்சி வடிவிலான பிராண்ட் லோகோவை பெற்ற முதல் காரும் எக்ஸ்யூவி700 ஆகும்.

இந்திய சந்தையில் தற்சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.26.99 லட்சம் வரையில் உள்ளன. மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த கார் எக்ஸ்யூவி700 ஆகும். இருப்பினும், பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏற்ப பல்வேறு வேரியண்ட்களில் எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்படுகிறது.

kannada youtuber buys mahindra xuv700

மிட்நைட் பிளாக், எலக்ட்ரிக் நீலம், நேபாளி பிளாக், டாஸ்ஸிலிங் சில்வர், சிவப்பு ரேஜ், எவரெஸ்ட் வெள்ளை என மொத்தம் 6 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த மஹிந்திரா கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், மிட்நைட் பிளாக் பெயிண்ட் ஆப்ஷனில் எக்ஸ்யூவி700 காரை யூடியூப்பர் சாம் சமீர் வாங்கியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படுகின்றன. இதில், 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 200 பிஎஸ் மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 185 பிஎஸ் மற்றும் 450 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னத்தான்... யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்தாலும், அதன் மூலமாக புதியதாக காரை வாங்குவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். நிச்சயமாக, யூடியூப் & இன்ஸ்டாகிராம் பணத்தை மட்டும் நம்பி சாம் சமீர் புதியதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கவில்லை. அதாவது, வேறு எதாவது வழியிலும் சாம் சமீருக்கு பண வரவு இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2024, 19:16 [IST]
English summary
Young kannada youtuber sam sameer buys mahindra xuv700 check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X