பைக் விக்குற விலையில எலக்ட்ரிக் ஆட்டோ... எத்தனை பேரது வாழ்க்கையை மாற்ற போகுதோ!!

சிலியோ இபைக்ஸ் (ZELIO Ebikes), கடந்த 2021இல் இருந்து செயல்பட்டுவரும் இந்தியாவின் எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனம் ஆகும். ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஐ மட்டுமே உற்பத்தி செய்துவந்த சிலியோ நிறுவனம் முதல்முறையாக எலக்ட்ரிக் 3-வீலர்கள் (Electric 3-Wheelers)-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த புதிய எலக்ட்ரிக் 3-வீலர்களின் விலை ஆனது வெறும் ரூ.1.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிலியோவின் இந்த புதிய எலக்ட்ரிக் வாகனங்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் தற்போதுதான் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுள் 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா (Auto Rickshaw)-வும் ஒன்றாகும். ஏனெனில், ஆட்டோ ரிக்‌ஷாக்களை அதிக தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டியிருக்காது. மொபைல் போனை போல் சார்ஜ் செய்து, சார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.

zelio ebikes launch electric 3-wheelers

இதன் காரணமாகவே, மார்க்கெட்டில் அவ்வப்போது புது, புது எலக்ட்ரிக் 3-வீலர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிலியோ நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் எலக்ட்ரிக் 3-வீலர்களின் பெயர், டங்கா பட்டர்ஃபிளை (Tanga Butterfly) மற்றும் டங்கா எஸ்.எஸ் (Tanga SS) ஆகும். இதில் டங்கா பட்டர்ஃபிளை வாகனத்தின் விலை ரூ.1,45,000 ஆகவும், டங்கா எஸ்.எஸ் வாகனத்தின் விலை ரூ.1,40,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இவை இரண்டையும் நகர்புற பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, கிராமப்புற பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தலாம். இவை இரண்டையும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 'இவி இந்தியா எக்ஸ்போ 2024' கண்காட்சியில் சிலியோ காட்சிப்படுத்தி இருந்தது. இதில், டங்கா பட்டர்ஃபிளை ஆனது மில்ட் ஸ்டீல் (Mild Steel)-னாலும், டங்கா எஸ்.எஸ் ஆனது வளையாத இரும்பினாலும் உருவாக்கப்பட்டவைகளாக உள்ளன.

இந்த ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இந்தியாவின் லாஸ்ட்-மைல் கனெக்ட்டிவிட்டி போக்குவரத்துக்கு ஏற்றவையாக விளங்குகின்றன. இவை இரண்டையும் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என சிலியோ தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் டாப்-ஸ்பீடு 30kmph ஆகும். இவற்றில் 1200 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

zelio ebikes launch electric 3-wheelers

இந்த மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 48/60 வோல்ட் 135 ஆம்பியர் ஈஸ்ட்மேன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் நிரப்ப 8 மணிநேரம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவான சார்ஜிங்கிற்காக இந்த இரு வாகனங்களிலும் வோல்டேஜ் ஏற்ற/ இறக்கங்களில் இருந்து பாதுகாக்கும் வசதிக் கொண்ட எஸ்.எம்.பி.எஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவை இரண்டிலும் அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்பக்க லிவர் மூலமாக செயல்படும் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. டங்கா பட்டர்ஃபிளை எலக்ட்ரிக் ஆட்டோவை சிவப்பு, கிரே, வெள்ளை, ஸ்கை ப்ளூ மற்றும் மிலிட்டரி பச்சை உள்ளிட்ட நிறங்களிலும், டங்கா எஸ்.எஸ் எலக்ட்ரிக் ஆட்டோவை நீலம், சிவப்பு, கடல் நீலம், கிளியின் பச்சை மற்றும் கிரே உள்ளிட்ட நிறங்களிலும் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் டெலிவிரி வேலைகளுக்கு மிகவும் ஏற்றவை ஆக இருக்கும். இருப்பினும், இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான சிலியோவை நம்பி எத்தனை பேர் இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்களை வாங்குவர் என்பது உறுதியாக தெரியவில்லை. இவற்றின் எடை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், இவற்றை கண்ட்ரோல் செய்வது எளியதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2024, 21:49 [IST]
English summary
Zelio ebikes launch tanga butterfly and tanga ss electric 3 wheelers
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+