தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இந்த கார்களுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி கிடைக்காது ஏன் தெரியுமா?
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இந்த காலகட்டத்தில் வாகன விற்பனை அதிகரிப்பதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கு ஏகப்பட்ட தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இதனால் தற்போது கார் வாங்குபவர்கள் மற்ற நேரத்தில் கார் வாங்குவதை விட குறைந்த செலவில் காரை வாங்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கார்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் கூட தள்ளுபடிகளை அளிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் வழக்கமாக பண்டிகை காலங்களில் வழங்கப்படும் மற்ற சலுகைகள் எதுவும் இந்த கார்களுக்காக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் மக்கள் மத்தியில் இந்த கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் இந்த கார்களின் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் இப்படியான தள்ளுபடிகள் சலுகைகள் எதுவும் வழங்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கிறது.

ஜேட்டோ டைனமிக்ஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி குறிப்பிட்ட வாகனத்திற்கு காத்திருப்பு காலம் எவ்வளவு இருக்கிறது? மாதம் அந்த நிறுவனம் எவ்வளவு வாகனங்களை தயாரிக்கிறது? என்பதை பொறுத்துதான் ஒரு நிறுவனம் தள்ளுபடிகளை அறிவிக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் காத்திருப்பு காலம் அதிகமாக இருந்து தயாரிப்பு குறைவாக இருக்கும். வாகனங்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட தள்ளுபடிகளை அறிவிப்பதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படியாக தயாரிக்கப்படும் வாகனங்கள் தயாரித்தவுடன் நேரடியாக விற்பனைக்கு செல்கின்றன. ஸ்டாக்கிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் எல்லாம் தற்போது என்ன விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறதோ அதே விலையில்தான் விற்பனையாகி விடுகிறது. தொடர்ந்து இதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 1,25,460 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த காருக்கு கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 3 முதல் 14 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அடுத்த இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் சமீபத்தில் தான் அறிமுகமானது. அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மொத்தமே 830 கார்கள் தான் விற்பனையாகி உள்ளன. இந்த காருக்கும் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் ஆறு முதல் பத்து வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அடுத்த இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற கார் இருக்கிறது. இந்த கார் இந்த ஆண்டு மத்தியில்தான் விற்பனைக்கு அறிமுகமானது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 42,381 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 8 முதல் 32 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த காருக்கும் ஒரு ரூபாய் கூட தள்ளுபடிகள் அறிவிக்கப்படவில்லை.
அடுத்த இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 1,22,659 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த கார்களுக்கும் ஒரு ரூபாய் கூட தள்ளுபடிகள் அறிவிக்கப்படவில்லை. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 2 முதல் 32 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அடுத்த இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் கார் இருக்கிறது. இந்த காரை பொறுத்தவரை தனது ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 42,191 கார்கள் விற்பனையாகி உள்ளன. எந்த காருக்கும் ஒரு ரூபாய் கூட தள்ளுபடிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரை வாங்க வேண்டும் என்றால் 40 முதல் 60 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமாக டிமாண்ட் இருக்கும் வாகனங்களுக்கு எப்பொழுதும் தள்ளுபடிகளை அறிவிக்காது. மக்கள் மத்தியில் டிமாண்ட் குறைவாக இருக்கும் அதே நேரத்தில் தயாரிப்பு அதிகமாக இருக்கும் வாகனங்களை எப்படியாவது விற்க வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை காலங்களை பயன்படுத்தி அதை தள்ளுபடிகள் அறிவித்து விற்பனை செய்கின்றன என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









