இது தெரியாம புது காரை வாங்காதீங்க! போன வருஷம் அதிகம் வித்த கார் இது தான்!
இந்தியாவில் தற்போது 2026ம் நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில் கடந்த நிதியாண்டில் எந்தெந்த வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளது. வழக்கம் போது இந்த பட்டியிலும் மாருதி நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்த வருகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
10 வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் கார் இருக்கிறது. இந்த பட்டியலில் உள்ள ஒரே லேடர் ஃபிரேம் கார் இது தான். இந்த கார் மார்கெட்டில் ரூ13.99 லட்சம் முதல் ரூ24.89 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த கார் 4 X4 செட்டப் கொண்டதாக இருக்கிறது. இதில் ஆஃப்ரோடு அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் கிளாசிக் வெர்ஷனாக பழைய ஸ்கார்ப்பியா கார் இருக்கிறது. இந்த கார் ரூ13.62 லட்சம் முதல் ரூ17.50 லட்சம் என்ற விலையி்ல விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 7 சீட்டர் எஸ்யூவி கார் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,64.842 கார்கள் விற்பனையாகியுள்ளன.
9வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இருகு்கிறது. இந்த கார் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,65,021 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் இந்தகாரின் 4வது தலை முறை கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் விற்பனை அதிகரிக்க இது ஒரு முக்கியமான காரணம் ஆகும். கார் சிறப்பாக விற்பனையாவது ஒரு பக்கம் இருந்தாலும் நீண்ட ஆண்டுகளாக இந்த கார் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது.

இந்த காரின் விற்பனையை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ6.84 லட்ம் முதல் ரூ10.19 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் இருக்கும் குறை என்றால் டாப் வேரியன்டில் கூட சில முக்கியமான அம்சங்கள் இல்லை. பின்பக்க சீட்டில் இருப்பவர்களுக்கு தலை பகுதியில் சில பிரச்சனைகள் இருக்கிறது.
மாருதி ஃபிராங்க்ஸ் கார் இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் மொத்தம் 2 லட்சம் கார்கள் என்ற விற்பனை மைல் கல்லை எட்டியது. கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1,66.216 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சம் என்றால் அதிக இட வசதி மற்றும் சொகுசு அம்சங்கள் தான்.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ7.52 லட்சம் முதல் ரூ12.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இந்த காரிலும் மாருதி நிறுவனம் மார்கெட்டில் உள்ள மற்ற கார்களில் இருக்கும் சில அம்சங்கள் இல்லை என்பது இந்த காரில் இருக்கும் பின்னடைவு தான்.
இந்த பட்டியலில் 7வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,67,162 பலேனோ கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள டாடா ஆல்ட்ராஸ், மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ6.70 லட்சம் முதல் ரூ9.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறது.
இந்த பட்டியலில் 6வது இடத்தில் மாருதி நிறுவத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 1.79,641 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காிரன் விலையை பொருத்தவரை ரூ6.49 லட்சம் முதல் ரூ9.50 லட்சம் என்ற விலையில் விற்பனயைாகி வருகிறது. இந்த காரில் சிறப்பம்சம் என்றால் அதன் டிரைவிங் கண்ட்ரோல் தான். இந்த காரை கையாள்வது மிக எளிமையாக இருக்கும். இந்த காரில் இருக்கும் மைலேஜ் திறனும் இந்த காரின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணம்.
மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த கார் தற்போது மாருதி நிறுவனத்தின் அரேனா ஷோரூமில் விற்பனையாகி வருகிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,89,163 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரில் உள்ள பிராக்டிக்காலிட்டி மற்றும் சொகுசான அம்சங்கள் ஆகியவை உள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை 8.69 லட்சம் முதல் ரூ14.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரே எம்பிவி கார் இது தான் இந்த கார் கடந்த நிதியாண்டில் மட்டும் 1.9 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரில் இருக்கும் பிரச்சனை டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டும் தான் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ8.97 லட்சம் முதல் ரூ13.26 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா கார் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1.95 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கடந்த ஜனவரி மாதம் தான் அறிமுகமாகியுள்ளது. இதுவும் இந்த காரின் இவ்வளவு அதிகமான விற்பனைக்கு உதவியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள கிராண்ட் விட்டாரா, எலவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக விற்பனயாகி வருகிறது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் டாடா பஞ்ச் கார் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 1.96 லட்சம் கார்கள் விற்பனையாகி இந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ6.20 லட்சம் முதல் ரூ10.32 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள சிட்ரோன் சி3, மாருதி இக்னீஸ் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த நிதியாண்டில் மொத்தம்1.98 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் அதிக மைலேஜ் மற்றும் குறைவான விலை மற்றும் பராமரிப்பு செலவு குறைவு காரணமாக பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ5.65 லட்ம் முதல் ரூ7.48 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த நிதியாண்டு ஆட்டோமொபைல் வாகன துறைக்கு மிக சிறப்பான ஆண்டாக மாறியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாகியுள்ளன. மிக குறைவான விற்பனை எண்ணிக்கையிலேயே பல கார்கள் டாப் 10 பட்டியலில் இருக்கிறது. இந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை மாற கூ ட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









