டாடா, மஹிந்திரா எல்லாம் ஓரம்போ! இந்தியாவிலேயே தயாராகும் அடுத்த 2 இவி களத்திற்கு வரப்போகுது!

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கிவிட்டது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா நிறுவனமும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே இந்த எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.இந்நிறுவம் முதற்கட்டமாக 2 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

கியா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்நிறுவனம் ஏற்கனவே வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இவி6 மற்றும் இவி 9 ஆகிய கார்களை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செயஅது வருகிறது. இந்நிலையில் அடுத்த ஓராண்டிற்கும் குறைந்த விலையில் மாஸ் மார்கெட்டில் 2 எலெக்ட்ரிக் கா்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Kia Syros Ev Carens EV

அதில் முதல் காராக கியா நிறுவனம் தனது எம்பிவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த கார் முதல் மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம் தனது கேரன்ஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தான் இதில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த கார் மாசு இல்லாத வாகனமாக உருவாகும். மாருதி எர்டிகாவை விரும்பும் வாடிக்கையாளர்களை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையாகும் கியா கேரன்ஸ் காரை விட கேரன்ஸ் இவி காரில் சில வெளிப்புற மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரில் இருந்து தான் இந்த இவி கார் உருமாற்றம் பெறும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாகற்றமாக முன்பக்க பகுதி முழுமையாக கவர் செய்யப்பட்டிருக்கும். தனித்துவமான பம்பர் மற்றும் கிரில் பகுதிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Kia Syros Ev Carens EV

இந்த காரின் முன்பகுதி முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் வாகனத்திற்கு கூலிங் தேவைப்படும் போது தானாக திறந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிரைவிங் ரேஞ்ச் அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது. இதன் வீல்களும் கவர் செய்யப்பட்ட டிசைனில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒட்டு மொத்தமாக இந்த கார் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

கியா கேரன்ஸ் இவி காருக்குள்ளே வித்தியாசமான கியர் செலக்டர், சென்டர் கண்சோலில் டுயல் பானரோமிக் டிஸ்பிளே இருக்கும். இதில் எலெக்ட்ரிக் காருக்கான தனித்துவமான ஃபங்சன் எல்லாம் இடம் பெற்றிருக்கும். இந்த காரில் 51.4 கிலோ வாட் ஹவர் என்எம்சி பேட்டரி பேக் இடம் பெறும் இது 169 எச்பி பவரை வெளிப்படுத்தும் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கார் முழு சார்ஜில் 425 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Syros Ev Carens EV

அதே போல இரண்டாவது எலெக்ட்ரிக் காராக கியா நிறுவனம் தனது சைரோஸ் என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்த கார் இந்தியா முழுவதும் சமீபத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த கார் பெட்ரோல் சைரோஸ் காரிலிருந்து வடிவமைப்பு சற்று வேறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் இந்த இரண்டு கார்களுக்கும் இரண்டு விதமான பேட்டரி செட்டப்களை பயன்படுத்ததிட்டமிட்டுள்ளது. இதனால் இதை சோதனை முயற்சி கார்களாக களம் இறக்குகின்றன. இந்த சோதனை வெற்றி பெற்றால் அடுத்தடுத்து பல கார்களை அந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2025, 11:30 [IST]
English summary
2 new kia evs launching in 2025 26 in india key details
மேலும்... #kia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X