புது கார் வாங்கபோறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நவம்பரில் 2 தரமான கார் வருது!
நீங்கள் புதிதாக எஸ்யூவி கார் ஒன்றை வாங்கும் மனநிலையில் இருக்கிறீர்களா? கொஞ்சம் பொருத்திருங்கள் வரும்நவம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யூ காரையும், டாடா நிறுவனம் தனது புதிய சியாரா காரையும் வெளியிட தயாராக இருக்கிறது. இந்த இரண்டு கார்கள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி தனது புதிய தலைமுறைன வென்யூ காரை அறிமுகப்படுத்துகிறது. டாடா நிறுவனம் தனது சியாரா காரை வரும் நவம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளுது. இந்த இரண்டு கார்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

டாடா நிறுவனம் முதலில் தனது சியாரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை வெளியிடவே திட்டமிட்டிருந்தது. தற்போது அதை மாற்றி தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் பின்னர் வெளியிடப்படும் ென எதிர்பார்க்கப்படுகிறது.இதில் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சியாரா காரின் பெட்ரோல் வெர்ஷனை பொருத்தவரை 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகிறது. இதன்படி 1.5 லி நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின், டர்போ சார்ஜ்டு டிஜிடிஐ பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. இதில் டிஜிடிஐ இன்ஜின் 168 பிஎஸ் பபவரையும் 280 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஃஜின்கள் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கிடைக்கிறது.

இந்த டாடா சியாரா காரை பொருத்தவரை ரூ11 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டிசைன் அடிப்படையில் கிரெட்டாவிற்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வெளிப்புறத்தில் கவர்டு பின்பக்க கண்ணாடி, பெரிய வீல் ஆர்ச், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லைட், கனெக்டெட்ட எல்இடி பார்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.
இந்த காருக்கு உட்பகுதியிலல் 3 ஸ்கிரீன் கொண்ட லேஅவுட் வழங்கப்பட்டுள்ளது. இது போக டிரைவர்களுக்கு தனி டிஸ்பிளே, இது போக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன்பக்க பயணிக்கு தனி டிஸ்பிளே ஆகிய வசதிகள் உள்ளது. இந்த காரின் டேஷ்போர்டு டுயல் டோனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டியரிங் வீல் 4 ஸ்போக் கொண்டதாகவும், இதன் நடுவே டாடா லோகோ இலுமினேட் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக இந்த காரில் ஆம்பியன்ஸ் லைட்டிங், பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு டிரைவர் சீட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை தற்போது உள்ள பேஸ்லிஃப்ட் மாடல் பழைய மாடலை விட 48 மிமீ நீளமாகவும், 30 மிமீ அகலமாகவும், 20 மிமீ அதிக வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த காரில் டார்க் குரோம் கிரில் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. குவாட் பீம் எல்இடி லைட்பார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் முழு நீள எல்இடி ஸ்டிரிப் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உள்ளே எச் தீம் டிசைன் மொழி கையாளப்பட்டுள்ளது. டார்க் நேவி மற்றும் டவ் கிரே நிறத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உள்ளே இரண்டு 12.3 இன்ச் கொண்ட பானரோமிக் கர்வ்டு டிஸ்பிளே, வழங்கப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் NVIDIA பவர்டு கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 70 கனெக்டெட் கார் அம்சங்கள், 400+ வாய்ஸ் கமெண்ட்ஸ் 5 இந்திய மொழிகளில் வழங்க கூடிய வசதிகள் உள்ளது. இந்த காரில் 8 ஸ்பீக்கர் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், 20 கண்ட்ரோல் யூனிட்களுடன் ஒடிஏ அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் நவம்பர் மாதம் புதிய கார் வாங்கும் திட்டம் இருந்தால் கொஞ்சம் காத்திருங்கள் இந்த இரண்டு கார்கள் நிச்சயம் உங்கள் தேர்வில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. நவீன வசதிகளுடன் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் விற்பனை சிறப்பாக இருக்கும். என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









