26 கி.மீ மைலேஜ் தரும் இந்த கார் தான் இந்தியாவிலேயே நம்பர் 1 சேல்ஸ்! 7 பேர் போகலாம்!
2024 ஆம் ஆண்டு அதிக விற்பனையான கார் பட்டியல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுஸூகியின் 40 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் எஸ்யூவிகள், ஹேட்ச்பேக் மார்கெட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. டாப் 10 பட்டியலில் முதல்முறையாக, ஐந்து எஸ்யூவிகள், மூன்று ஹேட்ச்பேக்குகள், ஒரு எம்பிவி மற்றும் ஒரு செடான் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இரண்டு மாடல்கள் 4 இருக்கைகள் கொண்டவை. மாரூதியின் எர்டிகா அதிக விற்பனையான 7 சீட்டர் கொண்ட வாகனமாக வெளிப்பட்டு, ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 7 சீட்டர் விற்பனை பிரிவில் இந்த கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக மாறியுள்ளது. இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களுக்கு சமீபகாலமாக நல்ல மவுசு இருக்கும் நிலையில் இந்த கார் நல்ல விற்பனையை பெற்றுள்ளது

2024 ஆம் ஆண்டின் விற்பனை புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, டாடா பஞ்ச் 2,02,031 கார்கள் விற்பனையுடன் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து மாருதி சுஸூகி வேகன்ஆர் 1,90,855 கார்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. எர்டிகா 1,90,091 கார்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இது கடந்த ஆண்டு எர்டிகா மீதான வலுவான தேவையைக் காட்டுகிறது.
மாருதி எர்டிகா 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 103PS பவரையும் 137Nm டார்க்கை திறனையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் CNG மாடலையும் தேர்வு செய்யலாம். பெட்ரோல் எடிசன் 20.51 kmpl மைலேஜை வழங்குகிறது, அதேசமயம் CNG மாடல் 26.11 km/kg அற்புதமான மைலேஜை வழங்குகிறது.

எர்டிகா பேடல் ஷிப்டர்கள், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோமெட்டிக் ஏரி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது சுஸூகியின் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் பெரிய 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது வாய்ஸ் கமெண்ட் மற்றும் கனெக்டெட் கார் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது.
எர்டிகாவில் உள்ள கனெக்டெட் கார் அம்சங்களில் வாகன கண்காணிப்பு, டோ-அவே அலர்ட், ஜியோ-ஃபென்சிங், அதிக வேக அலர்ட் மற்றும் தொலைநிலை செயல்பாடுகள் ஆகியவை உள்ளன. ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்காக இதில் 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 7 சீட்டர் கொண்ட வாகனங்களை மட்டும் கவனத்தில் கொண்டால், மாருதி சுஸூகி எர்டிகா 1,90,091கார்கள் விற்பனையைப் பதிவு செய்தது. மஹிந்திரா ஸ்கார்பியோ 1,66,364 கார்கள் என்ற விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இவர்களிடையே 23,727 கார்கள் வித்தியாசம் உள்ளது.
எர்டிகாவின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 8.69 லட்சம். இது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எர்டிகா மாருதி XL6, கியா கேரன்ஸ், மஹிந்திரா மராஸோ, டொயோட்டா ரூமியான் மற்றும் இன்னோவா, ரெனோல்ட் டிரைபர் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
இந்தியாவில் 7 சீட்டர் வாகனங்களின் போட்டி சூழலில், இது மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ மாடல்களுடனும் போட்டியிடுகிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் 7 சீட்டர் வாகனங்களுக்கான இந்த மாடல்களின் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியின் வாகனம் இன்று இத்தகைய வாகனங்களில் இருந்து எதிர்பார்க்கப்படும் தரம் அல்லது செயல்திறன் தரங்களை சமரசம் செய்யாமல், கொடுக்கும் காசுக்கு ஓர்த்தான காரை தேடும் வாடிக்கையாளர்களிடையே தனது நிலையை உறுதியாகத் தக்கவைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications









