வெறும் ரூ13.79 லட்சத்திற்கு இப்படி ஒரு காரா? எல்லாமே சூப்பரா இருக்குதே!
ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்எக்ஸ் பிளஸ் வேரியன்டை தற்போது வெளயிட்டுள்ளது. இந்த கார் மக்கள் மத்தயில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் நிலையில் இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய வெர்னா காரின் எஸ் எக்ஸ்+ வேரயின்டில் 2 விதமான கியர் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேனுவல் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் தனித்துவமான ஐவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காரில் கூடுதலாக 8 ஸ்பீக்கர் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டட் ஹீட்டட் சீட்டுகள் முன்பக்க பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. லெதர் சீட்டுகள், முன்பக்கம் பார்க்கிங் சென்சார் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்ட்டுள்ளது.

2025 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ்+ வேரியன்ட் மேனுவல் ரூ13.79 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகுமாகியள்ளது. இதுவே ஐவிடி கியர் பாக்ஸ் காரை பொருத்தவரை ரூ15.04 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் தனது கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வயர்டு மற்றும் வயர்லெஸ் அடாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அடாப்டர்களை பயன்படுத்தி ஆப்பிள் கார்பிளே அல்லது ஆண்ட்ராய்டு ஆட்டோவை கனெக்ட் செய்ய முடியும். இதற்காக ஃபிசிக்கல் கேபிள் தேவையில்லை. இதில் நேவிகேஷன், மியூசிக் பிளே, ஹேண்ட்ஸ் ஃப்ரீ கண்ட்ரோல்கள் ஆகியவற்றை செய்ய முடியும். ஹூண்டாய் நிறுவனம் இந்த காருடன் சேர்ந்து மொத்தம் 7 கார்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள வயர்லெஸ் அடாப்டர் காரணமாக காரின் இன்கார் தொழிற்நுட்ப அனுபவம் சிறப்பாக இருக்கிறது. இந்த கார் வாடிக்கையாளர்களின் தேவையை போக்கும் வகையில் பல அம்சங்களுடன் வந்திருப்பதாக அந்நிறுவனம் கரு்துகிறது. இந்த தேவை மக்கள் மத்தியில் இருப்பதை உணர்ந்து இந்த காரை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
ஹூண்டாய் வெர்னா காரை பொருத்தவரை தற்போது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ12.90 லட்சம் முதல் ரூ20.27 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இ்நத காரில் மொத்தம் 18 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது டிசிடி கியர் பாக்ஸ் உடன் தான் விற்பனையாகி வருகிறது. இது போக மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்படியாக மக்கள் விரும்பும் காரை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். அப்படி தான் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் மக்கள் தேவையை புரிந்து இந்த வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிட் வேரியன்டாக அறிமுகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications









