பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நம் மக்களுக்கு இந்த கார் மீது கிறக்கம்... இப்போது விலையை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க
லேண்ட் ரோவர் (Land Rover), உலகளவில் லக்சரி கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம். குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்கள் லேண்ட் ரோவரில் இருந்து உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன; இந்தியாவிலும் தான். இந்த நிலையில், இந்தியாவில் புதிய மேம்படுத்தப்பட்ட டிஃபெண்டர் காரை லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் உதவியுடன் செயல்படும் பிரிட்டிஷ் கார் நிறுவனம்தான் லேண்ட் ரோவர் ஆகும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு என குறிப்பிட்ட ரசிகர் கூட்டம். குறிப்பாக, ஏற்கனவே கூறியதுபோல் லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதனாலேயே குறிப்பிட்ட கால இடைவெளியில் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களை லேண்ட் ரோவர் நிறுவனம் மறக்காமல் அப்டேட் செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது, புதிய 2025ஆம் ஆண்டிற்கான டிஃபெண்டர் கார்கள் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல், 90, 110 மற்றும் 130 என்கிற 3 விதமான உடலமைப்புகளில் 2025 டிஃபெண்டர் கிடைக்கும்.
இந்த 3 உடலமைப்புகளிலும் டிஃபெண்டரின் தோற்றம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். காரின் நீளம் மட்டும் வேறுப்படும். இந்த 3 உடலமைப்புகளிலும் 2025 டிஃபெண்டர் கார் எக்ஸ்-டைனாமிக் எச்.எஸ்.இ (X-Dynamic HSE) மற்றும் எக்ஸ் (X) என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும்.

2025ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக, டிஃபெண்டர் 130 காரை 7-சீட்டர் ஆப்ஷனில் வாங்கினால் 2வது வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள் தனித்தனியாக வழங்கப்படும். டிஃபெண்டர் 130 காரில் இவ்வாறு இரு கேப்டன் இருக்கைகள் முன்பு 8-சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனுடன், டிஃபெண்டர் கார்களில் வழங்கிவந்த தொழிற்நுட்ப அம்சங்களையும் லேண்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தி உள்ளது.
இதன்படி, 11.4-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 14 வழிகளில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகளை 2025 டிஃபெண்டர் கார் பெற்றுள்ளது. இதில், காரின் முன் இருக்கைகளை ஹீட்டிங், கூலிங் மற்றும் மெமரி செயல்பாடுகள் உடன் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆஃப்-ரோடு பேக், அட்வான்ஸ்டு ஆஃப்-ரோடு பேக், டைனாமிக் ஹேண்ட்லிங் பேக் மற்றும் ஏர் சஸ்பென்ஷன் பேக் என 4 விதமான பேக் (Pack)-களுள் ஒன்றுடன் காரை வாங்கலாம். இவற்றுடன், 5.0 லிட்டர் வி8 என்கிற ஆற்றல்மிக்க என்ஜின் 2025 டிஃபெண்டர் காரில் நிறைய வேரியண்ட்களில் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பவர்ஃபுல்லான என்ஜின் உடன் 2025 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.39 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலும் புதிய டிஃபெண்டர் கிடைக்கும். இந்த என்ஜின்களுடன் டிஃபெண்டர் காரின் விலைகள் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே டிஃபெண்டர் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடலினால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. குறிப்பாக, வி8 என்ஜின் 2025 டிஃபெண்டரில் நிறைய வேரியண்ட்களில் வழங்கப்பட்டு இருப்பது பலருக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









