26.6 கி.மீ மைலேஜ் தரும் பெரிய கார்! குடும்பத்தோட எல்லாரும் ஒன்னா போகலாம்!
மாருதி நிறுவனம் 2025 கிராண்ட் விட்டாரா எஸ் - சிஎன்ஜி வேரியன்டை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ13.48 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அம்சங்கள் என்ன? எவ்வளவு மைலேஜ் தரும்? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் 2025 கிராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வேரியன்டை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கிராண்ட் விட்டாரா காரின் டெல்டா மற்றும் ஸெட்டா ஆகிய வேரியன்ட்களில் இந்த சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இந்த கார் டெல்டா வேரியன்டில் ரூ13.48 லட்சம் என்ற விலையிலும், ஸெட்டா வேரியன்ட் ரூ15.62 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த காரில் புதிதாக சில பாதுகாப்பு அம்சங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக் , ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட்டுகள், உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சில அம்சங்கள் அதன் ஹைபிரிட் இன்ஜின் காரிலும் இல்லை.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 2025 கிராண்ட் விட்டார சிஎன்ஜி காரில் ஆட்டோ ப்யூரிஃபை பிஎம்2.5 டிஎஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது போக கிளாரியானின் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக வயர்லெஸ் சார்ஜிங் டாக், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், பின்பக்க டோர் சன்ஷேடுகள், ஆர்17 அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இது போக ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் இன்டர்டெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் கனெக்டிவிட்டியுடன் ஸ்டியரிங் மவுண்ட் ஆடியோ கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் உள்ள சீட்டுகள் 60:40 என பிரிக்கப்பட்டுள்ளது. இது சாய்வு அம்சத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது போக கீலெஸ் என்ட்ரி புஷ் ஸ்டார்ட் பட்டன் உடன் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம், சுஸூகி கனெக்ட் உள்ளிட்ட அமசங்கள் உள்ளன.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை புதிய தலைமுறை கே சிரீஸ் 1.56 லிட்டர் டுயல் ஃஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது டுயல் விவிடி பெட்ரோல் இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 102 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிஎன்ஜியில் இயங்கும் போது 87 பிஎச்பி பவரும் 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 26.6 கி.மீ மைலேஜ் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்யூவி போன்ற பெயரிய கார்கள் சிறிய ரக பெட்ரோல் கார்கள் கூட தராத மைலேஜை தருகிறது. இது நிச்சயம் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிக மைலேனிற்காகவே இந்த கார் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு சமீப காலமாக மவுசு அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் காரை விட அதிக மைலேஜ் மற்றும் குறைவான எரிபொருள் செலவு இருப்பதால் இந்த காரை மக்கள் விரும்புகின்றனர். இந்த கார் நிச்சயம் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









