11.42 லட்ச ரூபாக்கு மாருதியின் காரொன்று விற்பனைக்கு வந்திருக்கு.. இந்த கார் இவ்ளோ மைலேஜ் தருமா?..
இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)-வும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் 2025 வெர்ஷனே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக இந்த கிராண்ட் விட்டாரா காட்சியளிக்கின்றது.
இதை 2025ஆம் ஆண்டிற்கு ஏற்ப லேசாக அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது மாருதி கார் காதலர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த கார் மாடலின் பாதுகாப்பு விஷயத்திலேயே மாருதி சுஸுகி லேசான அப்டேட்டை வழங்கி இருக்கின்றது. அத்துடன் கூடுதலாக சில புதிய சிறப்பம்சங்களை சேர்த்தல் மற்றும் புதிய வேரியண்டை இணைத்தல் ஆகியவற்றையும் 2025 கிராண்ட் விட்டாராவில் மாருதி சுஸுகி செய்திருக்கின்றது.

டெல்டா பிளஸ் (Delta+) எனும் புதிய வேரியண்ட்டையே மாருதி சுஸுகி புதிதாக அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வேரியண்டின் விலை ரூ. 16.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
அதேவேளையில், கிராண்ட் விட்டாராவை ரூ. 11.42 லட்சம் என்கிற விலையிலேயே வாங்கிக் கொள்ள முடியும். ஆமாங்க, இதுவே இந்த கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடல் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சிக்மா (Sigma), டெல்டா (Delta), ஜீட்டா (Zeta) மற்றும் ஆல்ஃபா (Alpha) ஆகியவையே அவை ஆகும். இந்த அனைத்து வேரியண்டுகளிலும் ஆறு ஏர் பேக்குகள் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கதகுந்தது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த வேலையை மாருதி சுஸுகி பார்த்திருக்கின்றது.
இதுமட்டுமல்ல இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், மும்முனை பாயிண்டுகளைக் கொண்ட சீட் பெல்ட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் மவுண்டு உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிஎம் 2.5 ஏர் ப்யூரிஃபையர், எல்இடி லைட்டுகள் மற்றும் 17 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவையே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமல்ல 9 அங்குல ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வயர்லெஸ் சார்ஜர், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஹெட்ஸ் அப் திரை, கிளாரியன் சவுண்டு சிஸ்டம், சுஸுகி இணைப்பு அம்சம் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 19.38 கிமீ முதல் 27.97 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவும் ஒன்றாகும். இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பையே இரட்டிப்பாக்கும் வகையில் தற்போது புதிய வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் தங்களுடைய சிறப்பான ஆதரிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









