இந்தியால இந்த காரு மட்டும் விற்பனைக்கு வந்துச்சு டாடா நானோவே வந்தாலும் சமாளிக்க முடியாம திணறும்! குட்டி இ-கார்

எம்ஜி மோட்டார் (MG Motor), இதுவே டாடா நானோ (Tata Nano) காருக்கே டஃப் கொடுக்கின்ற மாதிரியான குறைவான விலையில் விற்பனைச் செய்யக் கூடிய ஓர் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. எம்ஜி 4 (MG 4) கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். உலக சந்தையில் ஏற்கனவே இந்த கார் மாடல் விற்பனையில் உள்ளது. இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருப்பது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

வெகுவிரைவில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் அடுத்தபடியாக இந்தியாவின் மின்சார கார் பிரிவை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கின்றது எம்ஜி. இதே சூழலை உலக நாடுகளில் மேற்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் கார் மாடலே எம்ஜி 4 ஆகும்.

Mg 4 electric hatchback unveiled

இதை அந்நிறுவனம் புதுப்பித்திருப்பது அந்த காரை அதிகம் நேசிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. 2022 ஆம் ஆண்டிலேயே இந்த காரை முதல் முறையாக இவ்வுலகிற்கு எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும்.

இம்முறை இந்த காரை தன்னுடைய சைபர்ஸ்டர் (Cyberster) கார் மாடலை தழுவி எம்ஜி தயார் செய்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. புதுப்பிக்கப்பட்ட எம்ஜி 4இன் லுக் சைபர்ஸ்டரை பிரதிபலிக்கும் வகையிலேயே உள்ளது. இதை உறுதிப்டுத்தும் விதமாக மிகவும் ஷார்ப்பான முன் பக்கம் எம்ஜி 4 கொண்டிருக்கின்றது.

Mg 4 electric side design

எம்ஜி சைபர்ஸ்டர் ஓர் ஸ்போர்ட் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். புதிய எம்ஜி 4 கார் மாடலை அலங்கரிக்கும் விதமாக எல்இடி புரஜெக்டர் ஹெட்லைட், சற்றே தூக்கப்பட்ட நிலையில் உள்ள பான்னெட், மூடப்பட்ட அல்லது முழுமையாக அடைக்கப்பட்ட லுக் கொண்ட கிரில் மற்றும் தேன் கூட போன்ற கிரில் உள்ளிட்டவற்றை இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.

ஆனால், இந்த கார் என்ன மாதிரியான ரேஞ்சை வழங்கும் என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இதுமட்டுமல்ல விலை பற்றிய விபரங்களையும் அது வெளியிடவில்லை. இருப்பினும், குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், விரைவில் எம்ஜி 4 இ-காரின் விலை, பேட்டரி பேக் ஆப்ஷன் மற்றும் ரேஞ்ச் பற்றிய விபரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பப்படுகின்றது.

Mg 4 electric rear design

அதேநேரத்தில் இந்த காரில் லித்தியம் அயன் ஃபாஸ்பேட் வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் மோட்டாரைப் பொருத்த வரை 163 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இதுமட்டுமல்ல இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீட்டராக இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதைத்தாண்டி வேறு எந்த தகவலும் இந்த கார் பற்றி இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய காரே இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்கிற கேள்வி நம்மில் பலரிடையே எழும்பி இருக்கின்றது.

நிச்சயம் இந்த கார் நாட்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த நாட்களில் இந்தியாவில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி 4 காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை வைத்தே அக்கார் நாட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் இ-கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் நிறுவனம் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிக சிறப்பாக இ-கார்களே விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. எனவே கட்டாயம் இந்த காரை இந்தியாவின் மற்ற மின்சார கார் உற்பத்தியாளர்களுக்கு சவால்விடுக்கும் வகையில் விற்பனைக்குக் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 17:00 [IST]
English summary
2025 mg 4 electric hatchback unveiled with cyberster inspired design overhaul
மேலும்... #mg motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X