ஊரார் ஒதுக்கி வெச்ச ஓவியம்... யாரும் கண்டுக்கல என்றாலும் தரமான எம்ஜி கார் - ரூ.15 லட்சத்தில் இத்தனை வசதிகளா!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட அஸ்டர் (Astor) எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ.12.5 லட்சத்திற்குள் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) என அசத்தலான அம்சங்கள் புதிய 2025 எம்ஜி அஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய அஸ்டர் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்த பிறகு எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) என மக்களை அசரடிக்கக்கூடிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) எம்ஜி நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

2025 mg astor suv launched

இதனை தொடர்ந்து எம்9 (M9) என்கிற விலையுயர்ந்த சொகுசு எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க தயாராகி வரும் எம்ஜி நிறுவனம், அதற்கு இடையில் புதிய மேம்படுத்தப்பட்ட 2025 அஸ்டர் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், புதிய அஸ்டர் காரில் 10-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

1.5 லிட்டர் என்ஜின் உடன் 10-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை கொண்ட இந்தியாவின் ஒரேயொரு மிட்-சைஸ் எஸ்யூவி காராக தற்சமயம் எம்ஜி அஸ்டர் விளங்குகிறது. இந்த அசத்தலான அம்சங்கள் உடன் புதிய அஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.5 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

2025 mg astor suv launched

ஆனால், 2025 அஸ்டர் காரை ரூ.11.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்தே வாங்கலாம். இந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் கிடைக்காது. வழக்காமான விடிஐ-டெக் (VTi-TECH) என்ஜின் ஆப்ஷன்கள் உடன் 1.5 லிட்டர் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் 2025 அஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. புதிய அஸ்டர் காரில் புதியதாக ஷைன் மற்றும் செலக்ட் என்கிற இரு வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

10-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது புதிய அஸ்டர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பனோராமிக் சன்ரூஃப் ஷைன் வேரியண்ட்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் ஒரே எஸ்யூவி கார் எம்ஜி அஸ்டர் ஆகும்.

2025 mg astor suv launched

ரூ.15 லட்சத்திற்குள் ஷார்ப் புரோ வேரியண்ட்டை வாங்கலாம். இதில், வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஹீட்டட் வசதி கொண்ட ரியர்வியூ மிரர்கள் புதிய அஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்புக்கு 14 அதிநவீன டிரைவர் உதவி அம்சங்களை எம்ஜி அஸ்டர் பெறுகிறது.

இவை தவிர்த்து, அஸ்டர் காரில் வழங்கப்படும் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி, காருக்கு உள்ளே ஆட்டோ-டிம்மிங் வசதி உடன் ரியர்வியூ மிரர் மற்றும் 80க்கும் அதிகமான கனெக்டட் வசதிகள் உடன் ஐ-ஸ்மார்ட் 2.0 கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் அஸ்டர் எஸ்யூவி காரை மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளுடன் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை எம்ஜி நிவர்த்தி செய்ததா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் நிலைமையே வேறு ஆகும். ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து இந்திய மார்க்கெட்டில் வெற்றிநடை போட ஆரம்பித்துள்ளது. இத்தகைய நேரத்தில் வெளிவந்துள்ள புதிய அஸ்டர் கார் மார்க்கெட்டில் இழந்த அதன் இடத்தை மீட்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 31, 2025, 19:34 [IST]
English summary
2025 mg astor suv launched in india check price features all details here
மேலும்... #mg motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X