அடி மாட்டு விலையில் களமிறங்கிய குட்டி எலெக்ட்ரிக் கார்! பைக் வாங்கறதுக்கு பதில் பேசாம இதை வாங்கீரலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இதன் 2025 மாடல் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், பிஏஏஎஸ் (BaaS) திட்டத்தின் கீழும் கிடைக்கும். Battery as a Service என்பதன் சுருக்கம்தான் BaaS. செய்திக்குள் நுழையும் முன்பு இந்த திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம்.
BaaS என்பது ஒரு தனித்துவமான வாகன ஓனர்ஷிப் முறை ஆகும். அதாவது இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் காரை நீங்கள் பேட்டரியுடன் சேர்த்து வாங்க மாட்டீர்கள். அதற்கு பதிலாக குத்தகைக்கு எடுப்பீர்கள். இதன் மூலம் எவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓட்டுகிறீர்களோ, அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

இதன் மூலம் உங்களுக்கு நிறைய நன்மைகள் (Benefits) கிடைக்கும். அதாவது பேட்டரிக்கு பணம் செலுத்த போவதில்லை என்பதால், எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு நீங்கள் செலவு செய்யும் தொகை மிகவும் குறைவாக இருக்கும். இதுவே BaaS திட்டத்தின் மிக முக்கியமான நன்மையாக கருதப்படுகிறது.
சரி, 2025 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய தகவல்களுக்கு வருவோம். இந்த கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை எக்ஸ்சிக்யூட்டிவ் (Executive), எக்ஸைட் (Excite), ஃபாஸ்ட் சார்ஜர் உடன் எக்ஸைட் (Excite With Fast Charger), எக்ஸ்க்ளூசிவ் (Exclusive) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் உடன் எக்ஸ்க்ளூசிவ் (Exclusive With Fast Charger) ஆகியவை ஆகும்.

இதில், எக்ஸ்சிக்யூட்டிவ் வேரியண்ட்டின் BaaS விலை 4.99 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் 2.50 ரூபாயை செலுத்த வேண்டும். இந்த வேரியண்ட்டின் ஸ்டாண்டர்டு விலை 7 லட்ச ரூபாய் ஆகும். ஸ்டாண்டர்டு விலை என்பது நீங்கள் பேட்டரியுடன் சேர்த்து காரை மொத்தமாக வாங்குவதற்கு செலுத்தும் தொகை ஆகும்.
BaaS விலைக்கும், ஸ்டாண்டர்டு விலைக்கும் தற்போது உங்களுக்கு வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறோம். சரி, இந்த காரின் எக்ஸைட் வேரியண்ட்டின் BaaS விலை 6.25 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.50 ரூபாயை செலுத்த வேண்டும். இந்த வேரியண்ட்டின் ஸ்டாண்டர்டு விலை 8.26 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஃபாஸ்ட் சார்ஜர் உடன் எக்ஸைட் வேரியண்ட்டின் BaaS விலை 6.77 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.50 ரூபாயை செலுத்த வேண்டும். இதன் ஸ்டாண்டர்டு விலை 8.78 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மறுபக்கம் 2025 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் BaaS விலை 7.35 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.50 ரூபாயை செலுத்த வேண்டும். இந்த வேரியண்ட்டின் ஸ்டாண்டர்டு விலை 9.36 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக ஃபாஸ்ட் சார்ஜர் உடன் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் BaaS விலை 7.77 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.50 ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டும். இந்த வேரியண்ட்டின் ஸ்டாண்டர்டு விலை 9.78 லட்ச ரூபாய் ஆகும்.
இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் 17.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. 2025 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 41 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: BaaS திட்டத்தின் மூலம் 2025 கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையை எம்ஜி மோட்டார் நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது. வெறும் 4.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலை மிகவும் கவர்ச்சிகரமான ஒன்று என்பது எங்களுடைய கருத்து. எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை அதிகரிக்க இது உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருதுகிறது.
எம்ஜி மோமெட் இவி நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற ஒரு சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். தினசரி அலுவலகம் சென்று வருபவர்கள், பைக்கிற்கு பதிலாக எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தலாம். இது அளவில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கும் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








