2 லட்ச ரூபாய் வரை விலையை குறைத்து எம்ஜி ஒரு முடிவோட தான் இருக்கு! எந்த வேரியண்ட்டை வாங்குவது?

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift) எஸ்யூவி கார் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய ஹெக்டர் கார் ரூ.13.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஆச்சிரியப்படுத்தும் விதமாக புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 மாடலாக அறிமுகமாகியுள்ள புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், நடுத்தர அளவிலான எஸ்யூவி கார்கள் பிரிவில், சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட எஸ்யூவி என்ற அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது.

இது 'ஸ்டைல்', 'செலக்ட் புரோ', 'ஸ்மார்ட் புரோ', 'ஷார்ப் புரோ' மற்றும் 'சாவி புரோ' என ஐந்து முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது இல்லாமல், கூடுதல் நீளமான ஹெக்டர் பிளஸ் காரும் அப்கிரேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எம்ஜி ஹெக்டரை வாங்கத் திட்டமிடுபவர்களுக்காக, இந்த காரின் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் உள்ள முக்கிய சிறப்பம்சங்களை கொஞ்சம் சுருக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2025 mg hector facelift car variant-wise features

எம்ஜி ஹெக்டர் ஸ்டைல் (Style): ஹெக்டர் ஸ்டைல் வேரியண்ட்டின் வெளிப்புறத்தில் புரொஜெக்டர் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி டெய்ல்லேம்ப்கள், 17 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் (கவர்ஸ் உடன்), சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், டர்ன் இண்டிகேட்டருடன் கூடிய ஓஆர்விஎம் கண்ணாடிகள் ஆகியவை கிடைக்கும்.

உட்புறத்தில் ஃபேப்ரிக் துணியால் ஆன இருக்கைகள், சில்வர் ஃபினிஷ் டோர் ஹேண்டில்கள், கூடுதல் வெளிச்சத்திற்கு முன் & பின்பக்க விளக்குகள் (எல்இடி அல்லாதவை), லெதரெட் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டோர் பேட்கள் உள்ளிட்டவை இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சாய்க்கக்கூடிய ஸ்டீயரிங் சக்கரம், மடக்கக்கூடிய இரண்டாவது வரிசை இருக்கைகள், முன்/பின்பக்க சார்ஜிங் போர்ட்கள், அனைத்து கதவுகளிலும் ஒன்-டச் அப் & டவுன் கொண்ட பவர் விண்டோஸ், பின் வைப்பர்/வாஷர் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவும் இதில் அடங்கும்.

எம்ஜி ஹெக்டர் செலக்ட் புரோ (Select Pro): செலக்ட் புரோ வேரியண்ட்டின் வெளிப்புறத்தில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஸ்கிட் பிளேட்டுகளில் குரோம் ஃபினிஷிங், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், முன்/பின்பக்க ஸ்கஃப் பிளேட்டுகள், குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட கதவு கைப்பிடிகள் மற்றும் ஃபாக் விளக்குகள் முன்பக்கத்தில் ஹாலோஜன் தரத்திலும், பின்பக்கத்தில் எல்இடி தரத்திலும் கிடைக்கும்.

2025 mg hector facelift car variant-wise features

உட்புறத்தில் ஸ்டீயரிங் சக்கரத்தில் ஆடியோ கண்ட்ரோல்கள், சைகை கண்ட்ரோல்கள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், டிரைவர் & முன் இருக்கை பயணிக்கு முகம் பார்க்க தனியாக கண்ணாடி மற்றும் சன்கிளாஸ் ஹோல்டர் போன்ற பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் புரோ (Smart Pro): எம்ஜி ஹெக்டர் ஸ்மார்ட் புரோ வேரியண்ட்டில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் டோர் ஹேண்டில்களில் குரோம் ஃபினிஷிங் ஆகியவை வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். உட்புறத்தில் டூயல்-டோன் இன்டீரியர், லெதரெட் இருக்கைகள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை காருக்கு ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கின்றன. கனெக்டட் கார் அம்சங்கள், டிரைவிங் மோட்ஸ், ஸ்மார்ட் சாவியுடன் புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி மற்றும் ஆட்டோ ஓஆர்விஎம்கள் (ORVMs) ஆகியவை கூடுதல் வசதிகளாகும்.

எம்ஜி ஹெக்டர் ஷார்ப் புரோ (Sharp Pro): மேலே கூறப்பட்ட வேரியண்ட்களின் அம்சங்கள் உடன் கூடுதலாக, ஹெக்டர் ஷார்ப் புரோ வேரியண்ட்டின் வெளிப்புறத்தில் எல்இடி ஃபாக் விளக்குகள், ஜன்னலைச் சுற்றி குரோம் ஃபினிஷிங் மற்றும் குரோம் பாடி கிளெடிங் ஆகியவை காருக்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன. உட்புறத்தில் 8 வண்ண கேபின் விளக்குகள் (Ambient Lighting), காற்றோட்டமான (வென்டிலேட்டட்) முன் இருக்கைகள், பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் ஆகியவை பயணத்தை வசதியாக்குகின்றன.

எம்ஜி ஹெக்டர் சாவி புரோ (Savvy Pro): எம்ஜி ஹெக்டர் சாவி புரோ வேரியண்ட்டில் பவர் அட்ஜெஸ்டபிள் டெயில்கேட் (சைகை மூலமாக கண்ட்ரோல் செய்யும் வசதியுடன்) மற்றும் கேபின் காற்று சுத்திகரிப்பான் போன்ற வசதிகள் சவுகரியத்தை மேம்படுத்தக் கூடியவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 360-டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 அடாஸ் (ADAS) அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025 mg hector facelift car variant-wise features

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (Hector Plus): எம்ஜி மோட்டார் நிறுவனம் வழக்கமான ஹெக்டருடன், ஹெக்டர் ப்ளஸ் (Hector Plus) காரையும் வழங்குகிறது. ஹெக்டர் ப்ளஸ் ஆனது ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. வழக்கமான ஹெக்டரை விட, ஹெக்டர் ப்ளஸில் வேறுப்பட்ட இரு நிறங்களில் கேபின் இன்டீரியர், இரண்டாவது வரிசைக்கு ஸ்லைடிங் வசதி, மூன்றாவது வரிசைக்கு யுஎஸ்பி சார்ஜிங் வசதி, மூன்றாவது வரிசைக்கு தனி மின்விசிறி வேகம் கண்ட்ரோல் மற்றும் 50-50 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன.

Variant Seating Transmission Price (Ex-Showroom)
Style 5-Seater Manual (MT) ₹11,99,000
Select Pro 5-Seater Manual (MT) ₹13,99,000
Smart Pro 5-Seater Manual (MT) ₹14,99,000
Smart Pro 5-Seater Automatic (CVT) ₹16,29,000
Sharp Pro 5-Seater Manual (MT) ₹16,79,000
Sharp Pro 5-Seater Automatic (CVT) ₹18,09,000
Savvy Pro 5-Seater Automatic (CVT) ₹18,99,000
Sharp Pro 7-Seater Manual (MT) ₹17,29,000
Hector Plus Sharp Pro 7-Seater Automatic (CVT) ₹18,59,000
Hector Plus Savvy Pro 7-Seater Automatic (CVT) ₹19,49,000

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங், நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு வேரியண்ட்களுடன், டாடா சஃபாரி (Tata Safari) போன்ற நடுத்தர அளவு எஸ்யூவி கார்களுடன் மட்டுமல்லாமல், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) போன்ற சிறிய அளவிலான காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்கும் விலையின் அடிப்படையில் புதிய எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் சவால் விடுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் அத்தியாவசிய பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்களை எதிர்பார்த்து புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் வாங்குபவர்களுக்கு எண்ட்ரி-லெவல் ஸ்டைல் வேரியண்ட் கூட சிறந்த தேர்வாகும். எனினும், பார்க்கிங் கேமரா இல்லாதது இந்த வேரியண்ட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடே. ஹெக்டரின் அனைத்து வேரியண்ட்களிலும் 2 இருக்கை வரிசைகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், ஹெக்டர் பிளஸ் காரில் மட்டும் 3 இருக்கை வரிசைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் ஆனது டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்காஸர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 போன்ற கார் மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடுகிறது. தற்போது ஹெக்டரின் விலை குறைந்துள்ளதால், இது டாடா சியரா, மாருதி விக்டோரிஸ், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வாகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற சிறிய எஸ்யூவி கார்களுடனும் போட்டியிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 17, 2025, 16:24 [IST]
English summary
2025 mg hector facelift car variant wise features check all details here
மேலும்... #mg motor #mg hector #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X