20 கி.மீ மைலேஜ் தரும் 7 பேர் போற கார் இப்ப டீலர்ஷிப்களுக்கு வந்துடுச்சு! நீங்களும் டெஸ்ட் டிரைவ் பண்ணலாம்!
ரெனல்ட் நிறுவனம் சமீபத்தில் தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் இந்த காரின் டாப் வேரியன்டான எமோசன் வேரியன்ட் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர துவங்கியுள்ளது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் உங்கள் அருகில் உள்ள டீலர் ஷிப்களில் சென் பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உரவாக்கியிருந்தது இந்த கார் ரூ6.30 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. அதன்படி ஆத்தென்டிக், எவல்யூஷன், டெக்னோ, மற்றும் எமோஷன் ஆகிய வேரியன்கள் விற்பனையில் உள்ளது. இந்நிலையி்ல இந்த காரின் டாப் வேரியன்டான எமோஷனவ் வேரியன்ட் தற்போது டீலர்களுக்கு வர துவங்கிவிட்டன.

இந்த கார் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு முதன் முறையாக தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை நீங்கள் வாங்க நினைத்தால் இப்பொழுது டீலர் ஷிப்களுக்கு செல்லலாம் அங்கு இந்த கார் வர துவங்கிவிட்டன. நீங்கள் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாக துவங்கிவிட்டன.
இந்த காரின் டாப் வேரியன்ட் மட்டுமே தற்போது டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளன. இந்த கார் 3 சிங்கிள் டோன் மற்றம் 3 டுயல் டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டாப் வேரியன்ட் காரில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட், எல்இடி ஃபாக் லைட்டுகள், உள்ளன. இன்டிகேட்டர் ஹாலஜென் லைட்டாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் புதிய பம்பர் மற்றும் கிரில், ரெனால்ட் லோகோ ஆகிய அம்சங்கள் அனைத்து வேரியன்ட்களிலும் உள்ளன.

இதில் எமோஷன் வேரியன்டில் ஸ்டீல் வீல்கள், டுயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச் கிளாடிங், காண்ட்ராஸ்டான கருப்பு டோர் ஹேண்டில்கள், டோர் டீக்கல், இன்டிகேட்டர்களுடன் கூடிய ஓஆர்விஎம், கருப்பு நிற பி மற்றும் சி பில்லர்கள், 50 கிலோ லோடு ஏற்றக்கூடிய ரூஃப் ரெயில்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
இதன் பின்பக்கம் டிஃபாகர், வாஷர், வைப்பர்,மேலே வைக்கப்பட்டுள்ள பிரேக் லைட், டிரைபர் பேட்ஜ், முன்பக்கமும், பின்பக்கமும் ஸ்கிட் பிளேட்டுகள், உள்ளன. டாப் வேரியன்ட் காரில் ஸ்பேர் வீல் காரின் கீழ் பகுதியில் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புற பகுதி டுயல் டோன் பகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் சில்வர் ஃபினிஷ் ஹேண்டில் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போக கிளவ் பாக்ஸ்கள், கிரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட எவிஏசி நாப்கள், பின்பக்க ரூம் லைட்டிங் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் ஆக்ஸஸ் கார்டு, வயர்லெஸ் ஆண்ட்ராய்வு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் 20 கி.மீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்து தற்போது நவீனப்படுத்தியுள்ளது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். தற்போது டீலர்ஷிப்களுக்கு இந்த கார் வந்துள்ள நிலையில் நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என்றால் அருகில் உள்ள டீலர்ஷிப்பை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









