அடி மாட்டு விலையில் களமிறங்கிய 7 சீட்டர் காரின் டெலிவரி தொடங்கியது! நடுக்கத்தில் மாருதி சுஸுகி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Triber Facelift) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடல், இந்தியா முழுவதும் உள்ள ரெனால்ட் டீலர்ஷிப்களுக்கு தற்போது வர தொடங்கியுள்ளது.
அத்துடன் இதன் டெலிவரி (Delivery) பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த இன்ஜினின் அதிகபட்ச பவர் அவுட்புட் 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் ஆகும். 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ரிமோட் கீலெஸ் எண்ட்ரி என்று 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் ஆகிய வசதிகளையும் 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது. அத்துடன் 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.

இதில், முன் பகுதி பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சென்சார்கள் உடன் பின் பக்க பார்க்கிங் கேமரா ஆகியவை முக்கியமானவை ஆகும். அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி, ட்ராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் ஆகிய வசதிகளும், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் தவிர, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ள 6 ஏர்பேக்குகளும், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.40 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம், 2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








