எத்தனை தடவை ஓட்டினாலும் சலிக்கவே இல்ல! ரோட்டில் ஓடும் கப்பல் மாதிரி இருக்கு - ஸ்கோடா உண்மையில் ஜெய்ச்சிடுச்சி!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் பல்வேறு விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் சில விலையுயர்ந்த கார்களும் உள்ளன. அவ்வாறான இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த ஸ்கோடா கார் தான், கோடியாக் (Kodiaq) ஆகும்.
இத்தகைய காரை ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. ரூ.46.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்கோடா கோடியாக் அந்த அளவிற்கு பிரம்மாண்டமானதாகவும், எங்களை ஆச்சிரியப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. இந்த காரை ஓட்டி பார்த்த எங்களது ரிவியூவை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
ஸ்கோடா நிறுவனம் புதிய கோடியாக் காரை இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்லைன் மற்றும் எல்&கே (L&K) ஆகும். இதில் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.46.89 லட்சம் ஆகும். எல்&கே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.48.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வேரியண்ட்களையும் இன்று (ஏப்ரல் 17) முதல் இந்தியாவில் புக் செய்யலாம்.

புதிய கோடியாக் காரின் டெலிவிரிகள் வருகிற மே 2ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) உடன் மட்டுமே புதிய கோடியாக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் (Diesel Engine) உடன் விற்பனை செய்யப்பட போவதில்லை. புதிய கோடியாக் காரில் அடாஸ் (ADAS) வசதியை ஸ்கோடா வழங்காதது ஒரு குறையாக உள்ளது.


Click it and Unblock the Notifications








