வீழ்வென்று நினைத்தாயோ... 8 வருஷத்துக்கு பின் மீண்டும் அறிமுகமான கார்! விலையை கேட்டால் தலை சுத்துது

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட புதிய கோடியாக் (Kodiaq) என்கிற விலைமிக்க எஸ்யூவி (SUV) ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஸ்கோடா கார் அதற்கேற்ப விலையையும் சற்று அதிகமாக பெற்று வந்துள்ளது.

செக் குடியரசு நாட்சை சேர்ந்த கார் நிறுவனமான ஸ்கோடா, இந்தியாவில் கோடியாக் காரை அறிமுகம் செய்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 2016ஆம் ஆண்டிலேயே இந்த எஸ்யூவி காரை அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், கோடியாக்கின் விற்பனை இந்திய சந்தையில் பெரிய அளவில் இல்லாததால், சில வருடங்களுக்கு விற்பனையில் வைத்திருந்து விட்டு பின்னர் விற்பனையை ஸ்கோடா நிறுத்துவிடும்.

2025 skoda kodiaq suv launched

முன்பு விற்பனையில் இருந்த கோடியாக் காரை சமீபத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் ஸ்கோடா நிறுத்தியது. அதன்பின் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவராமல் இருந்த ஸ்கோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கோடியாக் காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் கிடைத்துவந்தன. புதிய கோடியாக் கார் முழுவதும் மறைக்கப்பட்டப்படி இந்திய சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை கூட செய்யப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த ஸ்கோடா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்கோடா கோடியாக் காரின் 2வது தலைமுறை மாடல் ஆகும். இதற்கு முன் விற்பனையில் இருந்தது முதல் தலைமுறை மாடல் ஆகும். ஸ்போர்ட்லைன் (Sportline) மற்றும் எல்&கே (L&K) என 2 விதமான வேரியண்ட்களில் புதிய கோடியாக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025 skoda kodiaq suv launched

இதில் ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.46.89 லட்சமாகவும், கோடியாக் எல்&கே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.48.69 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு விதமான கலர் ஆப்ஷன்களில் புதிய கோடியாக் கார் கிடைக்கும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஒரேயொரு டர்போ பெட்ரோல் என்ஜின் (Turbo Petrol Engine) ஆப்ஷன் உடன் மட்டுமே 2025 கோடியாக் காரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (DCT Automatic Gearbox) இணைக்கப்படுகிறது. புதிய ஸ்கோடா கோடியாக் ஆனது 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட கார் ஆகும்.

அதாவது, இந்த காரில் என்ஜின் ஆற்றல் கியர்பாக்ஸ் வாயிலாக காரின் அனைத்து 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். ஆனால், டைனாமிக் சேசிஸ் கண்ட்ரோல் மற்றும் அடாஸ் (ADAS) போன்ற வசதிகளை 2024 கோடியாக் கார் பெறவில்லை. எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய 18-இன்ச் அலாய் சக்கரங்கள், C-வடிவிலான எல்இடி டெயில்லைட்ஸ், ரூஃப் ரெயில்கள் மற்றும் ஒளிரக்கூடிய முன்பக்க கிரில் உள்ளிட்டவை புதிய கோடியாக்கில் வழங்கப்பட்டுள்ளன.

2025 skoda kodiaq suv launched

காருக்குள் கேபினின் பெரும்பான்மையான பகுதி பளிச்சிடும் நிறத்தில் உள்ளது. டேஸ்போர்டில் 12.9-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான தகவல்களை வழங்க 10-இன்ச் ஃபுல் டிஜிட்டல் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. காருக்குள் முன் இருக்கைகள் ஹீட்டிங் (Heating), வெண்டிலேஷன் (Ventilation), மசாஜ் (Massage) மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய வசதி உடன் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி காராக ஸ்கோடா கோடியாக் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, அந்த அளவிற்கு பெரிய அளவிலான கார் 2025 கோடியாக் ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பிரபலமான கார்களுக்கு போட்டியாக இருப்பதினாலேயே ஸ்கோடா கோடியாக் காரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என சொல்லலாம். முன்னதாக, புதிய கோடியாக் காரை நாங்கள் ஓட்டி பார்த்து எங்களது விரிவான டெஸ்ட் டிரைவ் விமர்சனத்தை வழங்கி இருந்தோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2025, 16:30 [IST]
English summary
2025 skoda kodiaq suv launched in india check price features engine all details here
மேலும்... #skoda #kodiaq #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X