இனி முதல் அமைச்சரின் பேரனே ஆசைப்பட்டாலும் கிடைக்காது! அத்தனை காரும் வெறும் 20 நிமிஷத்துல வித்துருச்சு!
இந்தியாவில் ஒரு சில கார்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிசனை (Mahindra BE 6 Batman Edition) இதற்கு ஒரு உதாரணமாக சொல்ல முடியும். பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிசன் வெறும் 999 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.
எனவே முன்பதிவு தொடங்கிய வெறும் 2 நிமிடங்களில் மற்றும் 15 வினாடிகளிலேயே (135 வினாடிகள்), 999 மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கார்களும் விற்று தீர்ந்து விட்டன. இந்த வரிசையில் மற்றொரு கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, முழுவதுமாக விற்று தீர்ந்துள்ளது.

அது 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் (2025 Skoda Octavia RS) ஆகும். 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கின. ஆனால் இந்திய சந்தைக்கு ஸ்கோடா நிறுவனம் 100 ஆக்டேவியா ஆர்எஸ் கார்களை மட்டுமே ஒதுக்கியிருந்தது.
100 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை முன்பதிவு செய்ய கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை போலவே, இந்திய சந்தைக்கு ஒதுக்கப்பட்ட 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்களும், வெறும் 20 நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார், வரும் அக்டோபர் 17ம் தேதிதான் (October 17) விற்பனைக்கே அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம்தான் 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். ஆனால் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட 100 யூனிட்களும் விற்று தீர்ந்துள்ளன.
இது இந்த காரை இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேசிக்கின்றனர்? என்பதை காட்டுகிறது. இந்திய சந்தையில் 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் விலை அனேகமாக 50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விலை அறிவிப்பை தொடர்ந்து, 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரின் டெலிவரி பணிகள் (Deliveries) வரும் நவம்பர் 6ம் தேதியில் (November 6) இருந்து தொடங்கப்படவுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 261 பிஹெச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில், 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் (Features) எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியா முழுக்க 100 பேருக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதால், 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் சாலையில் தனித்து தெரியும். அத்துடன் இது செயல்திறன் மிக்க கார்களில் ஒன்றாகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், விலை அதிகமானதாக இருந்தாலும் கூட, வெறும் 20 நிமிடங்களிலேயே 100 யூனிட்களும் விற்பனையாக உதவியுள்ளன என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








