அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய ஆல்டோ! ஆனா மூட்டை மூட்டையா பணத்தை கொட்டினாலும் இந்த காரை வாங்க முடியாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எனவே இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஆல்டோ மிகச்சிறந்த ஆப்ஷனாக இருந்து வருகிறது.

Maruti Suzuki Alto K10

இந்தியாவை போலவே, ஜப்பான் (Japan) சந்தையிலும், சுஸுகி ஆல்டோ மிகவும் பிரபலமான ஒரு காராகதான் திகழ்ந்து கொண்டுள்ளது. அங்கு சுஸுகி ஆல்டோ காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2025 மாடல் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2025 சுஸுகி ஆல்டோ காரின் முன் பகுதியில் க்ரில் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன் பக்க மற்றும் பின் பக்க பம்பர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் பின் பகுதியில் புதிய ரூஃப் ஸ்பாயிலரும் வழங்கப்பட்டுள்ளது.

2025 Suzuki Alto

இந்த கார் 8 மோனோ-டோன் மற்றும் 4 ட்யூயல்-டோன் என மொத்தம் 12 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனைக்கு கிடைக்கும். வசதிகளை (Features) பொறுத்தவரையில், ரேடார் அடிப்படையிலான அடாஸ், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சுஸுகி கனெக்ட் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அதே நேரத்தில் இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 658 சிசி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 658 சிசி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் ஆகியவை ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும், சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பவர் அவுட்புட் வெவ்வேறாக இருக்கும். அதாவது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 46 பிஹெச்பி பவர் மற்றும் 55 என்எம் டார்க் திறனை உருவாக்கும். மறுபக்கம் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 48 பிஹெச்பி பவர் மற்றும் 58 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினின் ஃப்ரண்ட் வீல் டிரைவ் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 28.20 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் பார்த்தால், ஜப்பானில் 2025 சுஸுகி ஆல்டோ காரின் ஆரம்ப விலை சுமார் 7 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 10 லட்ச ரூபாய் ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக 2025 சுஸுகி ஆல்டோ கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது சுஸுகி நிறுவனத்தின் தாய் நாடான ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட 2025 சுஸுகி ஆல்டோ கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 25, 2025, 13:37 [IST]
English summary
2025 suzuki alto launched in japan check all details here
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+