தாறுமாறா மைலேஜ் தரப்போகுது! இந்தியால விக்கலன்னு மாஸ்டர் பிளான் போட்டாங்க
மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரை அப்டேட் செய்து அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் மஹிந்திராவின் தார் காருக்கு போட்டியாக அறிமுகமாகி பெரிய அளவில் விற்பனையை பெறாத நிலையில் பல பிரச்சனைகளை சரி செய்து இந்த காரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
சுஸூகி நிறுவனம் தனது ஜிம்னி காரை கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச மார்கெட்டிற்காக அறிமுகப்படுத்தியது. சுமார் 7 ஆண்டுகள் இந்த கார் விற்பனையில் உள்ளன. இந்த காரின் 3 டோர் வெர்ஷன்கள் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளக்கு ஏற்றுமதி செய்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதன் 5 டோர் வெர்ஷன் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகுளாக இந்த கார் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் பெறவில்லை. இந்நிலையில் இந்த காருக்கு ஒரு மிட்-லைஃப் அப்டேட்டை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெளியானது இந்த காரின் 4ம் தலைமுறை மாடல் தான். தற்போது அந்த தலை முறை மாடலிலேயே புதிய அப்டேட் வெளியாகவுள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின்படி சுஸூகி நிறுவனம் இதன் டிசைன் அளவில் பெரியதாக எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என தெரிகிறது. பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் கூடுதல் அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்களையும் இந்த காரில் புகுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது அந்நிறுவனம் விற்பனை செய்யும் 3 டோர் ஜிம்னி காரில் 0.6 லி டர்போ பெட்ரோல் இன்ஜின், ஜிம்னி சியாராவில் 1.5 லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் 5 டோர் ஜிம்னி நோமேட் காரில் சுஸூகி பாதுகாப்பு சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இது போக டுயல் கேமரா உடன் எமர்ஜென்ஸி பிரேக்கை கட்டுபடுத்தும் அடாஸ் தொழிற்நுட்பம் இடம் பெறம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் பல ஆட்டோமொபைல் மார்கெட்களில் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. முக்கியமாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸில் ஆடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் ஆப்ஷன் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

ஜிம்னி கார் ஐரோப்பிய மார்கெட்டில் இதுவரை விற்பனையாகவில்லை. இதற்கு முக்கியமான காரணம் மாசு கட்டுப்பாடு தான். இதை சமாளிக்க இந்நிறுவனம் அந்த மார்கெட்களில் ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் கூடிய இன்ஜினை இந்த காரில் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு அப்டேட்களுடன் இந்த கார் வரும் ஆகஸ்ட் மாதம் சர்வதேச மார்கெட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு சர்வதேச மார்கெட்டில் கிடைக்கும் வரவேற்ப்பை பொருத்து இந்திய மார்கெட்டிலும் இந்த அப்டேட்கள் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications









