மாருதி பொழப்புல மண்ண அள்ளி போடும் 27 கிமீ மைலேஜ் கார்! தரமட்ட ரேட்ல களமிறக்கி மார்க்கெட்டை மிரள விட்டுட்டாங்க
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Altroz Facelift) மாடல், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்தியா முழுக்க உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு (Dealerships), 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர தொடங்கியுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த புதிய மாடலின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Official Bookings) ஏற்கும் பணிகள் வரும் ஜூன் 2ம் தேதி (June 2) முதல் தொடங்கப்படவுள்ளன. அதற்கு பிறகு டெலிவரி பணிகள் தொடங்கப்படும். இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் நாம் சாலைகளில் காணலாம்.
2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்கள் ஆகும்.

இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டிசிடி என மொத்தம் 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. இதன் பவர் அவுட்புட் 88 பிஎஸ் பவர் மற்றும் 115 என்எம் டார்க் ஆகும்.
மறுபக்கம் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 73.5 பிஎஸ் மற்றும் 103 என்எம் டார்க் ஆகும். அதே நேரத்தில் டீசல் இன்ஜின் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதன் பவர் அவுட்புட் 90 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்த இன்ஜின் ஆப்ஷன்களிலேயே அதிகபட்சமாக 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கூடிய பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.90 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, சன்ரூஃப், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், 8 ஸ்பீக்கர் ஹார்மன் ஆடியோ சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இவை எல்லாம் தவிர, யூஎஸ்பி சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவற்றையும் 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கியமான வசதிகளாக குறிப்பிடலாம். மேலும் 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.
பாதுகாப்பை பொறுத்தவரையில், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா, அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.89 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.49 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரும் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கருதப்படுகிறது. ஆனால் நாங்கள் இங்கே கூறியுள்ள அனைத்தும், அறிமுக சலுகை விலை ஆகும். அதாவது கூடிய விரைவில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் வடிவில் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








