மாருதிக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட போகும் கார் நாளைக்கு லான்ச்
இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா அல்ட்ராஸ் காரின் பல்வேறு புதிய மாடல்கள் இந்தியாவில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கொண்டே வருகின்றன. இதன்படி கடந்த 2021ம் ஆண்டில் டாடா அல்ட்ராஸ் காரின் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2022ம் ஆண்டு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டில் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி மாடல் களமிறக்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த 2024ம் ஆண்டு ரேசர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வரிசையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், நாளை (மே 22) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Altroz Facelift) மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், தலா 26.03 செமீ அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப் என ஏராளமான வசதிகளை (Features) 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.
இவற்றுடன், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 360 டிகிரி ஹெச்டி சர்ரவுண்ட் வியூ சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆம்பியண்ட் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, 6 ஏர்பேக்குகள், லுமினேட் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் உள்ளிட்ட வசதிகளையும் 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

வேரியண்ட்களை (Variants) பொறுத்து இந்த வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) எந்தவொரு மாற்றத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்யவில்லை. அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் புதிய மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும்.
இதன்படி 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் ஆகிய இன்ஜின்கள் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை 6.80 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 11.30 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதை விட சற்று அதிகமாக இருக்கலாம். டாடா செய்துள்ள அப்டேட்கள்தான் இதற்கான காரணம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை எவ்வளவு? என்பது நமக்கு நாளை தெரிந்து விடும். இந்த புதிய மாடலின் வருகையானது, பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








