7 லட்ச ரூபாய்க்கு விக்கும் கார் இது, ஆனா இந்த அம்சம் கூட இல்லயா? டாடா அல்ட்ராஸில் இதெல்லாம் மிஸ்ஸாகிடுச்சே!

2025 டாடா அல்ட்ராஸ் கார் தற்போது ஷார்ப்பான முன்பக்க பகுதி மற்றும் அதிக அம்சங்களில் புதிய அவதாரத்தில் அறிமுகமாகியுள்ளது. இந்த அப்டேட்டில் டிசிடி, ஏஎம்டி கியர் பாக்ஸ்கள், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்கள், ஃபிளாஷ் டோர் ஹேண்டில் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் இந்த காரில் சில முக்கியமான விஷயங்கள் மிஸ்ஸாகியுள்ளது. இப்படியாக இந்த காரில் பலரும் எதிர்பார்த்து மிஸ்ஸான சில விஷயங்களை பற்றி தான் காணப்போகிறோம்.

இந்த புதிய டாடா அல்ட்ராஸ் காரை பொருத்தவரை புதிய வடிவமைப்பில் இருந்தாலும் இந்த காரின் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் இந்நிறுவனம் பழைய மாடல் காரில் உள்ள அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இந்த இன்ஜினில் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் இல்லை. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் கர்வ் கார்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் ஏஎம்டி, டிசிஏ ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

2025 Tata Altroz Missing Features

டாடா நிறுவனத்தின் டிகோர் மற்றும் டியாகோ ஆகிய கார்களில் உள்ள சிஎன்ஜி வேரியன்ட்களில் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வேரியன்ட் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே வருகிறது. இந்த காரில் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் கிடையாது. டாடாவிடம் இந்த தொழிற்நுட்பம் இருந்தும், இந்த காரில் அதை பொருத்தவில்லை.

டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் ரேஸர் எடிசன் காரை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தும் போது அந்த காரில் வென்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது அதற்கு பிறகு இந்த கார் அப்டேட் செய்யப்படும் போது வென்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மாறாக டாடா நிறுவனம் இந்த காரில் வென்டிலேட்டட் சீட்டுகளை பொருத்தவில்லை.

2025 Tata Altroz Missing Features

புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸ் காரில் 10.25 இன்ச் கொண்ட டிஸ்பிளே சிறப்பாக அமைக்கப்பட்டள்ளது. அதால் இந்த காரில் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே இல்லை. இந்த காருக்க போட்டியாக விற்பனையாகும் பலேனோ, கிளான்ஸா போன்ற கார்களில் இந்த அம்சம் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த காரில் இந்த அம்சம் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று விற்பனைக்கு வரும் கார்களில் பவர்டு டிரைவர் சீட் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்த டாடா அல்ட்ராஸ் காரின் டாப் வேரியன்டில் அம்பியன்ஸ் லைட்டிங், ஃபிளாஷ் டோர் ஹேண்டில், இலுமினேட் செய்யக்கூடிய ஸ்டியரிங் வீல், ஆகிய அம்சங்கள் இருந்தாலும் இந்த காரில் பவர்டு டெயில் டிரைவர் சீட் இல்லாதது மிகப்பெரிய குறையாகவே தெரிகிறது.

2025 Tata Altroz Missing Features

டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக் ரக கார் என்பதால் இந்த காரில் பல முக்கியமான அம்சங்கள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தபடி பல முக்கியமான அம்சங்கள் இடம்பெற்ற போதிலும் இந்த காரில் சில அம்சங்கள் இடம்பெற்றவில்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் எப்படி மிஸ் பண்ணாங்கனு நம்மள நினைக்க வச்சிருக்குது!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது காரை அப்டேட் செய்யும் போது மார்கெட்டில் என்ன டிரெண்ட் இருக்கிறது. போட்டி தயாரிப்புகளில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவை என்ன இருக்கிறது என்பதை எல்லாம கணக்கிட்டு தான் இந்த முடிவை எடுக்கும். அதன்படி இதை எல்லாம் யோசித்து எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த அம்சங்களை எல்லாம் தேவையில்லை என கழிக்க வைத்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 7:00 [IST]
English summary
2025 tata altroz facelift missing popular features
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X