இந்த 3 கார்ல எது பெஸ்ட்? டாடா அல்ட்ராஸ் கார் போட்டிக்கு இத்தனை கார் இருக்குதா?
டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை நேற்று வெளியிட்டுள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் காராக இது மார்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா கிளான்ஸா, மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த காருக்கும் மார்கெட்டில் போட்டியாக விற்பனையாகும் மற்ற கார்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை இங்கே விரிவாக காணலாம் வாருங்கள்.
டாடா அல்ட்ராஸ் காரை பொருத்தவரை தற்போது ரூ6.89 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் அதன் போட்டி கார்களுடன் விலையை ஒப்பிடும் போது அதன் போட்டியாளரான டொயோட்டா கிளான்ஸா கார் ரூ6.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மாருதி பலேனோ காரை பொருத்தவரை ரூ6.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாக வருகிறது. ஹூண்டாய் ஐ20 காரை பொருத்தவரை ரூ7.04 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது எல்லாம் பேஸ் வேரியன்ட் விலைகள் தான்.

டாப் வேரியன்டை பொருத்தவரை ரூ9.92 லட்சம் என்ற விலையில் மாருதி பலேனோ காரின் ஆல்ஃபா ஆட்டோமெட்டிக் வேரியன்ட் விற்பனையாகி வருகிறது. அதே நேரம் கிளான்ஸா வி ஏஎம்டி வேரியன்டை பொருத்தவரை ரூ10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அல்ட்ராஸ் அக்கம்பிளிஷ்டு + எஸ் வேரியன்டை பொருத்தவரை ரூ11.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஹூண்டாய் என்-லைன் என்8 டர்போ டிசிடி வேரியன்டை பொரத்தவரை ரூ12.56 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
அளவுகளை பொருத்தவரை டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் 3990 மிமீ நீளம், 1755 மிமீ அகலம், 1523 மிமீ உயரம் மற்றும் 2501 மிமீ வீல் பேஸை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே அளவில்தான் பலேனோ, கிளான்ஸா, மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை ஐ20,கிளான்ஸா, பலேனோ ஆகிய கார்கள் சுமார் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது டாடா நிறுவனம் புதிய அல்ட்ராஸ் கார் குறித்த தகவலை இதுவரை வெளியிடவில்லை. இதுவும் அதே அளவுகளில் தான் இருக்க வாய்ப்புள்ளது.

இன்ஜின் ஆப்ஷன்களை பொரத்தவரை புதிய அல்ட்ராஸ் காரில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்தியாவில் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் விற்பனையாகும் ஒரே ஹேட்ச்பேக் கார் இது தான். பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் இன்ஜின் தான் அனைத்து கார்களிலும் பொருத்தப்படுகிறது. பலேனோ மற்றும் கிளான்ஸா ஆகிய கார்களில் அதிகபட்சமாக 90 எச்பி பவர் கிடைக்கிறது. அல்ட்ராஸ் காரில் 88 எச்பி பவரும், ஐ20 காரில் 83 எச்பி பவரும் கிடைக்கிறது.
கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொருத்தவரை டாடா அல்ட்ராஸ் காரில் 5 ஸ்பீடு மேனுவல்,6 ஸ்பீடு ஏஎம்டி, மற்றும் 6 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. ஹூண்டாய் ஐ20 காரில் 5 ஸ்பீடு மேனுவல் , 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்ள உள்ளது. கிளான்ஸா மற்றும் பலேனோ கார்களில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த கார்களின் விலையை பார்க்கும் போது பேஸ் வேரியன்ட் கார்களின் விலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. ஹூண்டாய் ஐ20 மற்றும் சற்று விலை அதிகமாக உள்ளது. டாப் வேரியன்டில் அல்ட்ராஸ் காரின் விலை அதிகமாக உள்ளது. நீங்கள் வாங்கும் வேரியன்டை பொருத்து விலை வித்தியாசம் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரில் மார்கெட்டில் உள்ள போட்டி கார்களுக்கு அனைத்து வகையிலும் கடும் பேட்டியை தரும் வகையில் வடிவமைத்துள்ளது. விலை,அம்சங்கள், மற்றமு் பிற விஷயங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களிடம் கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









