தீபாவளிக்கு டிரெஸ் எடுக்கற மாதிரி ஆளாளுக்கு வாங்க போறாங்க! 27 கிமீ மைலேஜ் தரும் விலை குறைவான கார் வருது!

இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த பன்ச் கார் விற்பனைக்கு வந்த பின்னர் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ரேஞ்ச் எங்கயோ சென்று விட்டது.

டாடா பன்ச் கார் விற்பனைக்கு வந்து இன்னும் 4 வருடங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே 5 லட்சம் யூனிட்கள் என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை மைல்கல்லை (Sales Milestone) டாடா பன்ச் கடந்து விட்டது. இத்தனைக்கும் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த சாதனையை டாடா பன்ச் படைத்து விட்டது.

Tata Punch Side View

தெளிவாக சொல்வதென்றால், சுமார் 3 வருடங்கள் 3 மாதங்களிலேயே டாடா பன்ச் கார், 5 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை கடந்து விட்டது. இது போன்று இன்னும் பல்வேறு பிரம்மாண்டாமான விற்பனை மைல்கல்களை பன்ச் கடக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது.

எனவே பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (2025 Tata Punch Facelift) மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு கொண்டுள்ளது.

Tata Punch

இதன் மூலமாக 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு தெரிய வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில் நமக்கு தற்போது ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 10.2 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது போல் தெரிகிறது. எனினும் 10.2 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருக்கும்.

Tata Punch Interior Design

இது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்ய கூடியதாக இருக்கும். இதுதவிர 'டச்' அடிப்படையிலான க்ளைமேட் கண்ட்ரோல் பேனலையும் நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இலுமினேட்டட் டாடா லோகோ உடன் லெதர் சுற்றப்பட்ட புதிய 2 ஸ்போக் மாடர்ன் ஸ்டியரிங் வீலும் வழங்கப்படும் என தெரிகிறது.

இவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய வசதிகளும் (Features) வழங்கப்படலாம். டிசைனை (Design) பொறுத்தவரையில், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய எல்இடி ஹெட்லைட்கள், புதிய அலாய் வீல்கள் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்பர் ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 86 பிஹெச்பி மற்றும் 113 என்எம் ஆகும்.

இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் இதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், சிஎன்ஜி மூலமாக இயங்கும் வகையிலான ஆப்ஷனையும் டாடா பன்ச் கொண்டுள்ளது. சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் 73.40 பிஹெச்பி மற்றும் 103 என்எம் ஆக இருக்கும்.

ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அப்படியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், டாடா பன்ச் காரின் சிஎன்ஜி இன்ஜின் தற்போதைய நிலையில் 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகிறது.

இதே அளவிலான மைலேஜைதான் 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 6.20 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.32 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அப்டேட்கள் காரணமாக விலை சற்று உயர்ந்தாலும் கூட, 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து இந்தியாவின் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகவே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, அதன் நேரடி போட்டி மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு எஸ்யூவி எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில், இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2025, 18:25 [IST]
English summary
2025 tata punch facelift nears india launch engine options mileage features design
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X