ரூ. 5 லட்சத்துக்கு இப்படி ஒரு வசதிகளுடன் காரா!.. டாடாவுக்கு ரொம்ப பெரிய மனசுங்க.. ஆரம்ப விலை அப்படியே இருக்கு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு மிக தாராளமான மனசு என்பதற்கு சான்றாக ஓர் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நிறுவனம் அதன் புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றான டியாகோ (Tiago)-வை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்து உள்ளது. புதுப்பித்தலுக்கு பின்னரும் இந்த கார் இந்தியாவின் மலிவு விலை கார் மாடலாகவே உள்ளது. ஆமாங்க, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் டியாகோவும் ஒன்றாகும். இந்த காரில் புதுப்பித்தலின்கீழ் பல்வேறு முக்கிய அம்சங்களை டாடா மோட்டார்ஸ் சேர்த்திருக்கின்றது.

இரண்டு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட அலாய் வீல்கள், எல்இடி டிஆர்எல்கள், பனி மின் விளக்கு, எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பின் பக்கத்தில் வைப்பர் என பல்வேறு அம்சங்களை இதில் சேர்த்திருக்கின்றது. மிக முக்கியமாக இதன் உயர்நிலை வேரியண்டிலேயே புதிய அம்சங்கள் பலவற்றை டாடா மோட்டார்ஸ் சேர்த்திருக்கின்றது.

2025 tata tiago launched

அந்தவகையில், 10 அங்குல மிதக்கின்ற வகையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் மிர்ரரிங் வசதி, புதிய டிஜிட்டல் கிளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், யுஎஸ்பி 'சி' டைப் சார்ஜிங் போர்ட், கிளைமேட் கன்ட்ரோல், சீட்டுக்கு பின்னால் பாக்கெட் வசதி, பவர் கண்ணாடிகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த காரில் வழங்கப்படும் இருக்கைகளும் புதிய தரத்திற்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. புதிய துணிகளே அதன் மேல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், புதிதாக 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், பிரதிபலிக்கும் வசதிக் கொண்ட டாடா லோகோ-வுடன் வழங்கப்பட்டு இருக்கும். இதுபோன்று இன்னும் பல அம்சங்களை புதிய டியாகோ பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, நிற தேர்விலும் புதிய ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அந்த நிற தேர்வுகள் பற்றிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே அது பற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் டியாகோ ஐசிஇ வெர்ஷனை மட்டுமல்ல மின்சார வெர்ஷனையும் அப்கிரேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஆமாங்க, டியாகோ இந்தியாவில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் இவி ஆகிய மூன்று வெர்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த நிலையிலேயே ஐசிஇ வெர்ஷன்களைத் தொடர்ந்து மின்சார வெர்ஷனிலும் புதிய அம்சங்களைச் சேர்த்து டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது மின்சார கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

அந்தவகையில், புதிய மறு சீரமைப்பு செய்யப்பட்ட கிரில், 14 அங்குல காற்றோட்டத்திற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்ட வீல் கவர்கள், இவி எனும் பேட்ஜ், புதிய ஸ்டியரிங் வீல் என ஏகப்பட்ட அம்சங்களை இது பெற்றிருக்கின்றது. இதுதவிர, எச்டி வசதிக் கொண்ட பார்க்கிங் கேமிரா, புதிய இருக்கை கவர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களையும் இதில் வழங்கி இருக்கின்றனர்.

புதுப்பித்தல் காரணமாக இந்த கார் மாடலின் விலை சற்றே உயர்ந்திருக்கின்றது. ஆனால், ஆரம்ப நிலை வேரியண்டுகளின் விலையில் டாடா மோட்டார்ஸ் கைகளை வைக்கவில்லை. சற்றே உயர்நிலை தேர்வுகளின் விலையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகையால், டியாகோ ஐசிஇ ரூ. 5 லட்சம் என்கிற அதே பழைய ஆரம்ப விலையிலும், டியாகோ இவி அதே ரூ. 8 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேநேரத்தில், இதன் ஐசிஇ வெர்ஷனில் விலையில் ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 30 ஆயிரம் வரையில் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த கார்களுக்கு எப்போதும் வரும் நாட்களிலும் நல்ல வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் டியாகோவும் ஒன்றாகும். இந்த கார் மாடலை புதுப்பித்து, அதேவேளையில் பழைய விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது டாடாவின் தாராள மனசை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2025, 14:40 [IST]
English summary
2025 tata tiago launched in india with enhanced features and starting price of rs 5 lakh
மேலும்... #tata motors #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+