பணக்காரங்க எல்லாம் இந்த காருக்காக தான் வெயிட்டிங்! ரோட்டுல போனா ஊரே உங்களை தான் பார்க்கும்!
2025 டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் அறிமுகமாகியுள்ளது. சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா கிரில்லோஸ்கர் மோட்டார் கிரிஸ்லோஸ்கர் நிறுவனம் 2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் கார்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு வெளியிட்ட மாடல் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த அப்டேட்டை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை இதில் செய்துள்ளது.

இந்த கார் பார்க்க ஸ்போர்ட்டியர் லுக்கில் இருக்கிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில், முன்பக்கம்மும், பின்பக்கமும் பம்பர்களில் குரோம் ஆசென்ட்கள் உள்ளன. இது போக டுயல் டோன் கருப்பு நிற ரூஃப்கான்ட்ராஸ்டான லுக்கை தருகிறது. கிளாஸி பிளாக் அலாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி ஆட்டிட்யூட் பிளாக், சூப்பர் ஒயிட், பியர்ல் ஒயிட், சில்வர் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த காருக்கு உள்ளே கருப்பு மற்றும் மெரூன் டுயல் டோன் தீம்மில் சீட்டுகள் மற்றும் டோர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக தானாக மடங்கும் கண்ணாடிகள், இலுமினேட் செய்யக்கூடிய ஸ்கஃப் பிளேட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இது தவிர வேறு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த காரின் இன்ஜினை பொரத்தவரை 1ஜிடி-எஃப்டிவி 2.8லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது வேரியபிள் ஜியோமென்ட்ரி டர்போ சார்ஜர் உடன் வருகிறது. இது 201 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இதில் வாடிக்கையாளர்கள் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனவ்களைதேர்வு செய்துகொள்ள முடியும். இந்தகார் 4X2 ரியர் வீல் டிரைவ் செட்டப் உடன் வருகிறது. இந்த காருக்கு 8 ஆண்டுகள் வரையிலா இஎம்ஐ திட்டம் கிடைக்கிறது. இதனால் குறைவான இஎம்ஐ செலுத்தினால் போதும். இது போக நீட்டிக்கப்பட்ட வாரண்டி டொயோட்டா ஜென்யூன் ஆக்ஸசரீஸ்களும் இதில் கிடைக்கும்.
இது போக இந்த காரை வாங்குபவர்களுக்க 5 ஆண்டுகள் வரை ரோடு சைடு அசிஸ்டென்ஸ் கிடைக்கும். வழக்கமாக வழங்கப்படும் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ வரை வாரண்டி கிடைக்கம். இது போக 5 ஆண்டுள் அல்லது 2.20 லட்சம் கி.மீ வரை வாரண்டியை நீடித்துக்கொள்ள முடியும்.
ஃபார்ச்சூனர் கார் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கெண்டு வரப்பட்டது தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றதால் இந்தகார் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இதுவரைஇந்த காரை 3 லட்சம் பேர் வாங்கியுள்ளனர்.
ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் காருக்கான புக்கிங் இந்த அக்டோபர் மாதம் 2ம் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இந்த காரை ஆன்லைன் மூலமும் புக்கிங் செய்யலாம். அல்லது டொயோட்டா டீலர் ஷிப் மூலமும் புக்கிங் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூோனர் கார் இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. அதில் புதிய எடிசன் கார் வந்திருப்பது மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும். பலர் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக இதை வாங்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








