நம்மால இந்த காரை நினைச்சுகூட பார்க்க முடியாது! பெரிய தலைகள் மட்டும் தான் இந்த காரை வாங்குவாங்க!
இந்தியாவில் 2025 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 காருக்குஇப்போது முன்பதிவு துவங்கியுள்ளது, இது ZX மற்றும் GR-S வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவி TNGA-F தளத்தில் கட்டப்பட்டுள்ளது, இது அதன் லேசான மற்றும் வலுவான லேடர் ஃபிரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 304 hp பவர் மற்றும் 700 Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும் டுயல் -டர்போசார்ஜ் செய்யப்பட்ட V6 டீசல் இன்ஜினால் இயக்கப்படுகிறது. 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் முழுநேர 4WD செட்டப் ஆகிய அம்சங்கள் உள்ளன.
GR-S வேரியண்ட் வேரியபிள் லாக்குகள், மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சர்பர்கள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் ஆஃப்-ரோடு ஆர்வலர்களை ஈர்க்கிறது. அதன் வெளிப்புற வடிவமைப்பில் ஒரு உயரமான முன்பக்க கிரில், மாற்றி அமைக்கப்பட்ட பம்பர்கள் உள்ளது. அடாப்டிவ் ஹை பீம் சிஸ்டம் (AHS) உடன் LED ஹெட் லைட்டுகள் பல்வேறு நிலைகளில் விசிபிளிட்டியை அதிகப்படுத்துகின்றன.

லேண்ட் க்ரூஸர் 300 காரின் உள்ளே, ஆடம்பர தொழிற்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, உயர் ரக லெதர் அப்ஹோல்ஸ்டிரி மற்றும் மென்மையான டச் பொருட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரைவர் காப்பிட் மையப்பகுதியில் ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணக்கமான 31.24 செமீ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன் சீட்களில் மெமரி செயல்பாட்டுடன் 8-வழி எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் அம்சங்களை வழங்குகின்றன.
ZX வேரியண்ட் நியூட்ரல் பீஜ் மற்றும் பிளாக் நிறங்களில் உட்புற கான்செப்டை வழங்குகிறது. அதே நேரத்தில் GR-S வேரியண்ட் பிளாக் மற்றும் டார்க் ரெட் நிறங்களில் வருகிறது. 4 ஸோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோ அமைப்பு அனைத்து பயணிகளுக்கும் வசதியை உறுதி செய்கிறது.

டொயோட்டா பாதுகாப்பு சென்ஸ் 3.0 லேண்ட் க்ரூஸர் 300 இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் பிரீ-கொலிஷன் சிஸ்டம் (PCS), லேன் டிரேஸிங் அசிஸ்ட் (LTA), லேன் டெபார்ட்சர் அலர்ட் (LDA) மற்றும் டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் (DRCC) ஆகியவை உள்ளன. பத்து SRS ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் 360-டிகிரி கேமரா அமைப்பு பாதுகாப்பும் அம்சத்தை மேலும் மேம்படுத்துகின்றன.
இந்த வாகனத்தில் ரியல் பைம் பரிசோதனை, டச் லாக் / ஒப்பன் செயல்பாடுகள், நேரடி டிராக்கிங், 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய JBL ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பல USB போர்ட்கள் ஆகியவற்றுடன் டொயோட்டாவின் i-Connect டெலெமேடிக்ஸ் சிஸ்டம் உள்ளது.
லேண்ட் க்ரூஸர் 300 இன் ZX வேரியண்டின் விலை ரூ. 2.31 கோடி ஆகும், அதே சமயம் GR-S வேரியண்ட் ரூ. 2.41 கோடி (இரண்டும் இந்தியாவில் எக்ஸ்-ஷோரூம் விலைகள்) ஆகும். நாடு முழுவதும் உள்ள எந்த டொயோட்டா டீலர்ஷிப்பிலும் இந்த காரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GR-S வேரியண்ட் கருப்பு வெளிப்புற எழுத்துக்கள், அக்ரஸிவான பம்பர் வடிவமைப்பு மற்றும் GR பேட்ஜிங் போன்ற பிரத்யேக ஸ்டைலிங் அம்சங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. இது இரண்டு ஷேடுகளில் கிடைக்கிறது: பிரீஷியஸ் பியர்ல் வெள்ளை பிரீமியம் கலர் மற்றும் அட்டீடியூட் பிளாக் கலரில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் பெரும்பாலும் அரசியல்வாதிகளால் அதிகம் விரும்பபடுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் இந்த காரில் உள்ள லுக், காரின் பாதுகாப்பு அம்சங்கள், இந்த கார் வைத்திருப்பதால் சமூகத்தில் அவர்களுக்க கிடைக்கும் மரியாதை காரணமாக அதிகம் விரும்பப்படுகிறது. இந்த காரின் முன்பதிவு துவங்கியுள்ளதால் இந்த காரை பல அரசியல் தலைவர்கள் புக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications








