காஸ்ட்லி கார்ல மட்டும் இருந்தது, இப்ப கம்மி ரேட்ல கார்ல கூட கொண்டு வந்துட்டாங்க!

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரை வரும் நவம்பர் 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டள்ளது. இதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கும். நிலையில் இந்த கார் குறித்த சில முக்கியமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த காரின் டீசல் இன்ஜினில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இடம்பெறும் தெரியவந்துள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் தனக்கென ஒரு இடத்தை பிடித்து குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இந்த கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இதன் வேரியன்ட் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த கார் HX 2, HX 4, HX 5, HX 6, HX 6T, HX 7, HX 8 மற்றும் HX 10. HX என்பது Hyundai Xperience என அர்த்தமாகும். இந்த காருக்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. ரூ25 ஆயிரம் முன்பணம் செலுத்தி காரை புக் செய்து கொள்ளலாம்.

2026 Hyundai Venue Engine

இந்நிறுவனம் இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புற கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த கார் மிஸ்டிக் சபையர், ஹஸல் ப்ளூ, டிராகன் ரெட், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே, அபயாஸ் பிளாக் ஆகிய சிங்கிள் டோன் கலர் களும், அபயாஸ் பிளாக் நிறத்துடனான ரூஃப் கலரில் பாடி கலர் ஆப்ஷன்ளாக அட்லஸ் ஒயிட் மற்றும் ஹசல் ப்ளூ ஆகிய டுயல் டோன் கலர் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது.
இந்த காரின் உட்புற கட்டமைப்பு டார்க் நேவி நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தனது இன்ஜின் ஆப்ஷனாக கப்பா 1.2 எம்பிஐ இன்ஜின் கப்பால 1.0லி டர்போ டிஜிஐ மற்றம் யூ2 1.5லி சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் மற்றும் டுயல் கிளட்ச் கியர் ஆப்ஷன்களும் உள்ளன. இந்த தகவல்கள் எல்லாம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இருக்கிறது.

2026 Hyundai Venue Engine

ஆனால் இதுவரை இன்ஜின் அடிப்படையிலான வேரியன்ட் விபரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் அந்த தகவல் தற்போது கசிந்துள்ளது. விகைடு ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட மார்கெட்டிங் மெட்டிரியலில் சில குறிப்பிட்ட தகவல்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதன்படி ஹூண்டாய் நிறுவனம் எச்எக்ஸ் 2 வேரயின்ட் முதல் 1.2லிட்டர் எம்பிஐ இன்ஜின் ஆப்ஷனை வழங்குகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது போக 1.0 லி டர்போ ஜிடிஐ இன்ஜின் பேஸ் வேரியன்டான எச்எக்ஸ் வேரியன்டில் வழங்கப்படுகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன்இணைக்கப்பட்டுள்ளுது. இது போக எச்எக்ஸ் 6 மற்றும் எச்எக்ஸ் 10ஆகிய வேரயின்ட்களில் 7 டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. எச்எக்ஸ் 5 மற்றும் எச்எக்ஸ் 8 ஆகிய வேரியன்ட்களில் மேனுவல் மற்றும் டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும், யூ2 1.5லி சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆப்ஷன் எச்எக்ஸ் 2, எச்எக்ஸ் 5, எச்எக்ஸ்7, மற்றும் எச்எக்ஸ் 10 ஆகிய வேரயின்ட்களில் கிடைக்கிறது. 6ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் எச்எக்ஸ் 2 மற்றும் எச்எக்ஸ் 7 ஆகிய வேரியன்ட்களிலும், எச்எக்ஸ் 10 வேரியன்டில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் எச்எக்ஸ் 5 வேரியன்டில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்கள் உள்ளன. டீசல் இன்ஜினில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் புதிய ஆப்ஷனாக வருகிறது.

2026 Hyundai Venue Engine

எச்எக்ஸ் 7 வேரியன்டில் டீசல் மேனுவல் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. எச்எக்ஸ் 6டி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மேனுவல் கியர் மட்டுமுே உள்ளஐது. பிரபலமான எச்எக்ஸ் 5 வேரியன்டில் மட்டும் அதிக இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளது. மேலும் இந்த காரில் டிராக்ஷன் மோடுகள் உள்ளன. மேலும் டிரைவ்மோடுகளம் உள்ளது. ஆட்டோமெட்டிக், டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் பெடல் ஷிப்டர்கள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் வென்யூ கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற நிலையில் இதில் வரும் மாற்றம் மக்கள் நீண்ட நாள் எதிர்பார்த்தது தான். ஆனால் டீசல் இன்ஜினில் ஆட்டோமெட்டிக் எல்லாம் எதிர்பார்க்காதது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 17:30 [IST]
English summary
2026 hyundai venue engine variants leak diesel automatic
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X