இந்தியாவில் தயாரிக்கப்படும் காரில் வந்த அப்டேட்! ஆனா இந்தியர்களுக்கு இது கிடையாது!
மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரை சமீபத்தில் அப்டேட் செய்துள்ளது. இந்த அப்டேட்டில் புதிதாக இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக டாப் வேரியன்ட்களில் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த காரில் என்னென்ன அப்டேட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுஸூகி நிறுவனம் ஜிம்னி காரை கடந்த 1970 ஆம் ஆண்டு lj 10 என்ற பெயரில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. இது இலகு ரக குறைந்த எடை கொண்ட 4X4 வாகனமாகும். இதில் 359 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின் தான் பொருத்தப்பட்டிருந்தது. ஜப்பான் நாட்டில் இந்த கார் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு ஒரு சிறிய ஆஃபர் உடனடியாக லேடீஸ் உடன் உருவாக்கப்பட்ட காராகவும் இதில் 4வீல் டிரைவ் ஆப்ஷனும் இருந்தது.

இந்நிலையில் இந்த காரை சுஸூகி நிறுவனம் கடந்த 1981 ஆண்டு அப்டேட் செய்தது. அப்போது இதை எல் ஜே சீரியஸிலிருந்து மாற்றி எஸ் ஜே சீரியஸாக அப்டேட் செய்தது அப்பொழுது இந்த காரில் உள்ள இன்ஜினை 1.0 லிட்டர் இன்னாக மாற்றி அமைத்தது. இது உலக அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது உலக அளவில் சுஸூகி சாமுராய் என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. இது ஒரு காம்பேக்ட் சைஸ் ஆஃப் ரோடு பெர்பார்மென்ஸ் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வந்தது.
கடந்த 1998 ஆம் ஆண்டு இந்த காரின் மூன்றாம் தலைமுறை அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டது. அப்பொழுது ஒரு ரெட்ரோ இன்ஸ்பயரான பாக்ஸில் வடிவமைப்பு இந்த கார் வடிவமைக்கப்பட்டது. அப்பொழுது இந்த காரின் இஞ்சின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக மாற்றப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த கார் வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஜெமினி காரில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளது. இந்த அப்டேட் ஜப்பானில் விற்பனையாகும் மூன்று டோர் கொண்ட ஜிம்மி கார்க்கான அப்டேட் தான் ஏற்கனவே ஐந்து டோர் கொண்ட ஜிம்னி காரை நோமேட் என்ற பெயரில் அந்நாட்டில் விற்பனையாகி வந்தாலும், அது புதிய கார் என்பதால் அதில் பெரிய அப்டேட் இல்லை. 3 டோர் கார் நீண்ட ஆண்டுகளாக அப்டேட் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 3 டோர் கார் மற்றும் சைடு இரண்டுமே இந்தியாவில் தான் தயாராகிறது.
இந்த காரின் பாடி வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை அதை நேரோபாடிஸ்ட் ஸ்டைல்தான் இந்த காரின் வடிவமைப்பு இருக்கிறது. ஜப்பானில் உள்ள காம்பேக்ட் கார் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த வடிவமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள பக்கவாட்டு கண்ணாடிகளைப் பொறுத்தவரை அதற்கு கீழே புதிதாக சிறிய கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பிளைன்ட் ஸ்பாட்டை குறைக்கும் வகையில் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆப் ரோடு காரில் முக்கிய அப்டேட் ஆக இந்த காரின் உள்ளே 4.2 இன்ச் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் டாப் வேரியண்டில் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டமும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மிக முக்கியமான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இந்த அப்டேட்டுக்காக மக்கள் காத்திருந்த நிலையில் தற்போது சுஸூகி நிறுவனம் இந்த அப்டேட்டை வழங்கி உள்ளது.
சென்சார் பிரேக் சப்போர்ட் இருக்கிறது அம்சங்கள் இருக்கிறது ஆட்டோமேட்டிக் வேரியண்டில் மட்டும் அடாப்ட் குரூப்ஸ் கண்ட்ரோல் மற்றும் ரியல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன ஜப்பானில் உள்ள பாதுகாப்பு அம்ச விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் நாட்டில் இந்த கார் நல்ல வரவேற்பு பெற்று விற்பனைக்கு வருகிறது.
சுஸூகி ஜிம்னி காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை அதனை வெர்ஷனில் 658 சிசி டர்போ சார்ஜர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 63 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 1.5 லிட்டர் நேச்சுரல் 4 சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 23 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனம் சுஸூகி ஜிம்னி காரின் 3 டோர் காரை அப்டேட் செய்துள்ளது.இது மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தகார் இனி விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









