புதிய செல்டோஸ் காரை கம்மி விலையில் வாங்கினால் இப்படிதான் இருக்கும்! புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!
புதிய தலைமுறை கியா செல்டோஸ் (Kia Seltos), முற்றிலும் மேம்பட்ட தோற்றத்துடனும் பல்வேறு பிரீமியம் அம்சங்களுடனும் சந்தைக்கு வந்துள்ளது. இதன் ஸ்டைல், தொழிற்நுட்ப உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு தொகுப்பில் கியா நிறுவனம் கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. எச்.டி.இ (HTE), எச்டிஇ (ஆப்ஷனல்) (HTE (O)), எச்டிகே (HTK), எச்டிகே (ஆப்ஷனல்) (HTK (O)), எச்டிஎக்ஸ் (HTX), எச்டிஎக்ஸ் (ஏ) (HTX (A)), ஜிடிஎக்ஸ் (GTX), ஜிடிஎக்ஸ் (ஏ) (GTX (A)), எக்ஸ் லைன் (X Line) மற்றும் எக்ஸ் லைன் ஏ (X Line A) என மொத்தம் 10 வேரியன்ட்கள் இந்த காரில் கிடைக்கின்றன.
ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் (ஏ) ஆகிய டாப் வேரியண்ட்கள் மட்டுமே எக்ஸ் லைன் ஸ்டைலிங் பேக்கிற்கு மேம்படுத்தும் வசதியைப் பெறுகின்றன. ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, குறைந்த விலையில் கிடைக்கும் எச்டிஇ மற்றும் எச்டிஇ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களை பற்றி ஆகும்.

எச்டிஇ வேரியண்ட்: 2026 கியா செல்டோஸின் எண்ட்ரி-லெவல் எச்டிஇ வேரியண்ட் பல அதிநவீன அம்சங்களுடன் வருகிறது. இதில் பனிக்கட்டி வடிவிலான MFR எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல்-கள், ஸ்டார் மேப் எல்இடி டெயில் லேம்ப்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா மற்றும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட முன் & பின்பக்க ஸ்கிட் பிளேட்கள் ஆகியவை கிடைக்கும்.
2026 செல்டோஸ் காரின் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டில் வீல் கவர் பொருத்தப்பட்ட 16-இன்ச் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்படும் என கியா அறிவித்துள்ளது. காரின் உட்புறத்தில் டாஷ்போர்டில், ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்க 4.2-இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே உடன் 12-இன்ச் எல்சிடி கிளஸ்டர் மற்றும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கிடைக்கும்.
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே, முன் & பின் இருக்கை பயணிகளுக்கு டைப்-சி USB சார்ஜிங் போர்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், மேனுவல் ஏர் கண்டிஷனிங் மற்றும் பின் ஏசி வென்ட்டுகள் ஆகியவை செல்டோஸ் எச்டிஇ வேரியண்ட்டில் கிடைக்கும் பிற சிறப்பம்சங்கள் ஆகும்.

பாதுகாப்பிற்காக, கியா நிறுவனம் அனைத்து வேரியண்ட்களிலும் 24 பாதுகாப்பு அம்சங்களைச் ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), பின் பார்க்கிங் சென்சார்கள், டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல், ரோல்ஓவர் சென்சார் மற்றும் டைனமிக் நாவிகேஷன் உடன் கூடிய ரியர்-வியூ கேமரா ஆகியவை இதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.
எச்டிஇ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்: எச்டிஇ வேரியண்ட்டில் கிடைக்கும் அம்சங்கள் உடன் எச்டிஇ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் சில பிரீமியம் அம்சங்கள் கிடைக்கின்றன. ஆட்டோ ஹோல்ட் உடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் பிரீமியம் ஸ்லைடிங் கவர் கொண்ட கப் ஹோல்டர் ஆகியவை இதில் அடங்கும்.
| HTE | HTE(O) | |
|---|---|---|
| 30.48 cm (12") Full Segment LCD Cluster with Advanced 10.5 cm (4.2") Color TFT MID | Yes | Yes |
| 31.24cm (12.3") HD Display Instrument Cluster | — | — |
| 26.04cm (10.25") HD Touchscreen | Yes | Yes |
| 31.24cm (12.3") HD Touchscreen | — | — |
| 12.7cm (5") Touch Screen - Dual Zone Automatic Temperature Control | — | — |
| Smartphone Wireless Charger | — | — |
| Wireless Android Auto/Apple CarPlay | Yes | Yes |
மேலும், மணல், சேறு, பனி என்கிற டிராக்ஷன் கண்ட்ரோல் மோட்கள் மற்றும் ஈகோ, நார்மல், ஸ்போர்ட் என்கிற டிரைவ் மோட்களையும் இந்த வேரியண்ட்டில் பெறலாம். தொழிற்நுட்ப அம்சங்கள் மட்டுமின்றி என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்வுகளும் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்படுகின்றன. அந்த வகையில், எச்டிஇ வேரியண்ட்டில் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.

2026 செல்டோஸ் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற குறைந்தது எச்டிஇ (ஆப்ஷனல்) வேரியண்ட்டை வாங்க வேண்டும். எச்டிஇ (ஆப்ஷனல்) வேரியண்ட்டில் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐவிடி ஆப்ஷனும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கூடுதலாக கிடைக்கும். மேலும், எச்டிஇ (ஆப்ஷனல்) வேரியண்ட்டை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் பெறலாம்.
| என்ஜின் தேர்வுகள் | HTE | HTE(O) | |
|---|---|---|---|
| Smartstream G1.5 6MT | Yes | Yes | |
| Smartstream G1.5 IVT | — | Yes | |
| Smartstream G1.5 T-GDI 6iMT | — | Yes | |
| Smartstream G1.5 T-GDI 7DCT | — | — | |
| 1.5L CRDI VGT 6MT | Yes | Yes | |
| 1.5L CRDI VGT 6AT | — | Yes |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் எப்படியாவது 2026 கியா செல்டோஸ் காரை வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த வேரியண்ட்கள் ஏற்றவையாக இருக்கும். இந்த இரண்டில் எந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டை வாங்குவது என்பது அவரவர் விருப்பம் ஆகும். புதிய தலைமுறை செல்டோஸ் காருக்கான முன்பதிவுகளை அறிவித்தப்படி, டிசம்பர் 11 நள்ளிரவு முதல் கியா துவங்கியுள்ளது. விருப்பப்படுபவர்கள் கியா டீலர்ஷிப் ஷோரூம்களிலும், கியாவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலும் காரை முன்பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









