மஹிந்திராவை உச்சத்தில் கொண்டு போக புதிய கார் ரெடி ஆகுது! நிறைய பேருக்கு சீட் இருக்கும்!
கார்கள் விற்பனையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி மிகவும் ஆச்சிரியப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதற்கு கடந்த 1 வருடத்தில் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட கார்கள் முக்கியமான காரணமாகும். எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO), தார் ராக்ஸ் (Thar ROXX), பிஇ6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) உள்ளிட்ட மஹிந்திராவின் சமீபத்திய கார்களினால், மஹிந்திராவில் இருந்து நீண்ட வருடங்களாகவே சிறப்பாக விற்பனையாகி வரும் பொலேரோ (Bolero) காரின் விற்பனை சற்று குறைந்துள்ளது.
இதனையடுத்து, மஹிந்திரா நிறுவனம் புதிய பொலேரோ காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. நீண்ட வருடங்களாக மஹிந்திராவின் நம்பிக்கைக்கு உரிய வாகனமாக பொலேரோ உள்ளது. பெட்டகம் வடிவிலான தோற்றத்தை கொண்ட பொலேரோ கார்களை அதிகமாக அரசு துறைகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

மேலும், நீடித்து உழைக்கும் தன்மையினால் பொது விற்பனையிலும் பொலேரோ சிறப்பான நிலையிலேயே உள்ளது. இருப்பினும், பொலேரோவின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக மஹிந்திரா நிறுவனம் வருகிற 2026ஆம் ஆண்டில் புதிய மேம்படுத்தப்பட்ட பொலேரோ காரை அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்த பிறகு கார் டிசைனர் பிரதாப் போஸ் (Pratap Bose) வடிவமைத்த மஹிந்திரா கார்கள் அனைத்தும் மார்க்கெட்டில் நல்ல கவனத்தை பெற்றுள்ளன.
அந்த வகையில், பிரதாப் போஸ் மஹிந்திராவின் நீண்ட கால அடையாளமான பொலேரோவில் கை வைக்க உள்ளது, புதிய பொலேரோ காரின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்கிற ஆவலை நமக்கு தூண்டுகிறது. மஹிந்திராவின் புதிய 'ஃப்ரீடம் ன்யு' (Freedom NU) பிளாட்ஃபாரத்தில் புதிய பொலேரோ வடிவமைக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, முற்றிலும் புதுமையான தோற்றத்தில் எதிர்பார்க்கப்படும் புதிய 2026 பொலேரோ கார் இவ்வாறான தோற்றத்தில் இருக்கலாம் என்று நாங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) வைத்து புதிய பொலேரோவின் தோற்றத்தை ஓரளவிற்கு கணித்துள்ளோம். இதுவரையில் நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களை (Spy Images) வைத்து இதனை நாங்கள் சாத்தியப்படுத்தி உள்ளோம்.
சாலையில் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட 2026 பொலேரோ காரின் சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் அனைத்திலும் கார் வழக்கம்போல் பெட்டகம் வடிவத்திலேயே காட்சியளித்தது. இருப்பினும், இந்த முறை பொலேரோவின் நீளம் அதிகரிக்கப்பட்டு, காரை செவ்வக வடிவில் அறிமுகம் செய்வர் என எதிர்பார்க்கிறோம்.
புதிய பொலேரோ காரின் முன்பக்கத்தில் ரீ-டிசைனிலான கிரில், வட்ட வடிவில் புதிய எல்இடி ஹெட்லைட்கள், ஹெட்லைட்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டி.ஆர்.எல்-கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம். அதேபோல், அலாய் சக்கரங்களை ட்யூயல்-டோன் நிறங்களிலும், காருக்கு உள்ளே கேபின் முழுவதும் கருப்பு நிறத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரையில் வெளியாகி உள்ள புதிய பொலேரோ காரின் ஸ்பை படங்களும் அவ்வாறுதான் காட்டியுள்ளன.
3-ஸ்போக்குகளை கொண்டதாக ஸ்டேரிங் சக்கரம், பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் புதிய பொலேரோவின் டேஸ்போர்டில் வழங்கப்பட உள்ளதை அந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிந்தது. இதற்கேற்ப டேஸ்போர்டின் டிசைனும் மாற்றப்பட உள்ளது. முன்னதாக வெளியாகி இருந்த ஸ்பை படங்களில், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உடன் செமி-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் புதிய பொலேரோவில் வழங்கப்பட்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொலேரோ காரில் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் அளவில்தான் மஹிந்திரா மாற்றங்களை செய்யும்; என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பெரியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களுள் புதிய 2026 மஹிந்திரா பொலேரோவும் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








