டாடா இப்பவே வெடவெடத்து போயிருக்கும்! மார்க்கெட்டையே தலைகீழா திருப்பி போட போகும் மாருதி கார்! விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது.
இந்த சூழலில், மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் பிரெஸ்ஸா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கார் இந்தியா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய மாடலில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய கார் சந்தையில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் ஒரு பாதுகாப்பு வசதி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதான் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய மாடலின் மிகப்பெரிய அப்டேட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி வியூ கேமரா, சுஸுகி கனெக்ட் மற்றும் 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் (Features) தொடர்ந்து வழங்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்.

மறுபக்கம் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் தொடர்ந்து வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயல்திறனை பொறுத்தவரை தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி என 2 இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options) தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gear Box Options) பொறுத்தவரையிலும் கூட, தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது.
இருப்பினும் லெவல் 2 அடாஸ் வசதி புதிதாக வழங்கப்படுவதை போல, டிசைனிலும் (Design) பல்வேறு மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். இதன்படி புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியும்.
இதுதவிர சிஎன்ஜி டேங்க் விஷயத்திலும் நல்ல அப்டேட் ஒன்றை நாம் எதிர்பார்க்கலாம். பொதுவாக சிஎன்ஜி கார்களின் பின் பகுதியில் டேங்க் இருக்கும் என்பதால், லக்கேஜ்களை வைத்து கொள்ள போதிய இடவசதி இருக்காது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) காரில், பாடிக்கு கீழே சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பின் பகுதியில் லக்கேஜ்களை வைத்து கொள்ள தாராளமான இடவசதி கிடைத்துள்ளது. இதே பாணியில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும், சிஎன்ஜி டேங்க், பாடிக்கு கீழேதான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதிலும் நம்மால் அதிக லக்கேஜ்களை வைத்து கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய மாடல் வரும் 2026ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.26 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் புதிய மாடலின் ஆரம்ப விலை அனேகமாக 8.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
அதேபோல் தற்போதைய மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை 13.01 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் புதிய மாடலின் டாப் வேரியண்ட்டின் விலை எவ்வளவாக நிர்ணயம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த செய்தியில் தற்போதைய விலை என நாங்கள் கூறியிருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








