நாடே எதிர்பார்க்கும் கார் நாளை வருகிறது! இந்த 5 விஷயம் ரொம்ப முக்கியம்!

எம்ஜி நிறுவனம் 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட தனது ஹெக்டர் காரை நாளை (டிச.15ம் தேதி) அறிமுகப்படுத்துகிறது. இநத காரில் காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்கள் புதி அம்சங்களின் சேர்க்கை எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு முதன் முறையாக எம்ஜி ஹெக்டர் என்ற காறை அறிமுகப்படுத்தியளது. இந்த கார் எம்ஜி பிராண்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்நிலையில் இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டு இந்த காரை அப்டேட் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நவீன காலத்தில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து வெளியிட் திட்டமிட்டுள்ளது. இ்நத காரில் வேறு என்ன விதமான அம்சங்கள் எல்லாம் இடம் பெறும்? வரிவாக காணலாம் வாருங்கள்.

2026 MG Hector Facelift

டிசைன் : டிசைன் அடிப்படையில் பார்க்கும் போது இந்த காரின் பெரும்பாலான மாற்றங்கள் இதில் தான் வரப்போகிறது. முக்கியமாக முன்பக்க கிரில் பகுதியில் மாற்றம் வரப்போகறிது. மும்பக்கமும் பின்பக்கமும் உள்ள பம்பர் பகுதிகள் மாறப்படவுள்ளன. ஆனால் முன்பக்கத்தில் குரோம் அம்சங்கள் அப்படியே தான் இருக்கப்போகிறது. எல்இடி லைட்டிங் செட்டபிலும் எந்த மாற்றங்கம் வரப்போவதில்லை. பின்பக்க லைட்டிங் செட்டப்பில் சிறல மாற்றங்கள் வரலாம். இது போக 19 இன்ச் அலாய் வீல்கள் புதிய வடிவமைப்பில் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.

உட்புறம்: இந்த காரின் உட்புறத்தில் வரப்போகும் மாற்றம் குறித்த பெரிய அளவில் தகவல்கள் இல்லை. கேபின் பகுதியில் சின்ன சின்ன அப்டேட்கள் இடம் பெறலாம். புதிய அப்ஹோல்சரி, மற்றும் கலர் ஆப்ஷனவ்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள போட்டி தன்மை புரிந்து அதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. உள் பக்கம் உள்ள டிஸ்பிளேவில் கூட மாற்றங்கள் வாய்ப்புகள் குறைவு தான்.

2026 MG Hector Facelift

அம்சங்களை பொருத்தவரை இந்த காரில் தற்போது உள்ள தொழிற்நுட்பங்கள் அப்படியே தொடரும். இதுபோக கூடுதல் பிரிமியமான அம்சங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய பின்பக்க சீட்களுக்கான ஏசி வென்டிலேஷன் இடம் பெற வாய்ப்புள்ளுது. இது போக சொகுசு வசதியும் அப்படியே இருக்கும். பானரோமிக் சன் ரூஃப், டிஜிட்டல் கிளஸ்டர், ஆம்பியன்ஸ் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு டிரைவர் சீட், ஏர் ஃப்யூரிபையர் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும்.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை தற்போது உள்ள அம்சங்கள் அப்படி இருக்கும். 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, ஹில் டிரைவிங் ஏய்ட்ஸ், லெவல் 2 அடாஸ், இப்படியாக பல அம்சங்களுடன் இந்த கார் வருகிறது.

2026 MG Hector Facelift

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காிரல் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் 141 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 167 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 14, 2025, 12:20 [IST]
English summary
2026 mg hector facelift debuts dec 15 highlights
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X