கம்மி ரேட்ல வரப்போற காரை பத்தி இந்த 10 விஷயம் உங்களுக்கு தெரியுமா?
நிஸான் நிறுவனம் தனது அடுத்த பெரிய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிறுவனம் மிட் சைஸ் எஸ்யூவி காரை இந்திய மார்கெட்டில் களம் இறக்கவுள்ளது. இந்த காருக்கு டேக்டான் என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த கார் வரும் 2026ம் ஆண்டின் 2ம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை பற்றி 10 முக்கியமான அம்சங்கள் பற்றி காணலாம் வாருங்கள்.
பெயர் காரணம்
நிஸான் நிறுவனம் டேக்டான் என்ற பெயரை இந்த நிறுவனத்திற்கு வைத்துள்ளது. இந்நிறுவனம் டெர்ரானோ காருக்கு மாற்றமாக இந்த காரை களம் இறக்குகிறது. இந்த டேக்டான் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையை அடிப்படையாக கொண்டது. இதற்கு ஆர்க்கிடெக்ட் அல்லது கிராஃப்ட்மேன் எனபெயர் ஆகும். இந்த காரின் பெயருக்கு பின்னால் உள்ள காரணம் இது தான்.

மினி பேட்ரோல்
நிஸான் நிறுவனம் சர்வதேச அளவில் பேட்ரோல் என்ற வாகனத்தை தயாரித்துவிற்பனை செய்து வருகுிறது. அந்த வாகனத்தின் வடிவமைப்பையே இங்கு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முகப்பு பகுதி பேட்ரோல் வாகனத்தின் வடிவமைப்பிலேயே உள்ளது. மேலும் இதில் சி வடிவ எல்இடி டிஆர்எல், கனெக்டிங் லைட் பார், ஃபிளாட் நோஸ், ஸ்லீக் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிளாட்ஃபார்ம்
நிஸான் நிறுவனம் டேக்டான் என்ற காரை தனது சிஎம்எஃப் -பி என்ற பிளாட்ஃபார்மில் தயாரிக்கிறது. இந்த பிளாட்ஃபார்மை நிஸான் மற்றும் ரெனால்ட் நிறவனம்சேர்ந்து தயாரித்தது. இது ரெனால்ட் சிலியோ கட்டுமானத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த காரை நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் சேர்ந்து தங்களது கயான்கோர்ட்ட கட்டுமான டெக்னோ சென்டரில் உருவாக்கியுள்ளனர்.

இந்த டேக்டான் காரில் டஸ்டரில் காரில் இருப்பது போல அதே இன்ஜின் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். டஸ்டர் காரில் 1.3 லிட்டர் இடிசி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது போக 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பம் கொண்ட இன்ஜின் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
டீசல்
நிஸான் நிறுவனத்தின் டெர்ரானோ காரில் 1.5லி டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருந்தது. இது 84 எச்பி பவர் 200 என்எம் டார்க் திறனிலும் 110 எச்பி 245 என்எம் டார்க் திறனிலும் இயங்கும் வகையில் விற்பனையானது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வந்தது. ஆனவால் இந்த டேக்டான் காரில் இந்த இன்ஜின் ஆப்ஷன் இருக்காது. பெட்ரோல் இன்ஜின் மட்டுமே ஒரே ஆப்ஷனவாக இடம்பெற வாய்ப்புள்ளது.

தயாரிப்பு ஆலை
நிஸான் நிறுவனம் நிஸான்-ரெனால்ட் நிறுவனம் சேர்ந்து அமைத்துள்ள சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள ஆலையில் வைத்துதான் இந்த காரை தயாரிக்கவுள்ளது. இந்த ஆலை கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த இடம் ஏற்றுமதி, கட்டுமானம், உள்ளிட்டவற்றிக்கு வசதியா இடம் என்பதால் இதை தேர்வு செய்துள்ளனர். இங்கிருந்து சர்வதேச அளவில் வாகனங்ளை ஏற்றுமதி செய்ய ஏற்றதாக இருக்கும்.
7 சீட்டர்
டேக்டான் கார் தற்போது 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காராக அறிமுகுமானாலும் விரைவில் இதில் 7 சீட்டர் வெர்ஷவும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் மக்கள் மத்தியில் வரவேற்றப்பை பெற்றுள்ள நிலையில் இந்த காரும் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். இதன் ரெனால்ட் வெர்ஷன் பொரெல் என்ற பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
8. உட்புற கட்டமைப்பு
இந்த டேக்டான் காரின் உட்புற கட்டமைப்பை இதுவரை அந்நிறுவனம் வெளியிடவி்லை. ஆனால் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். பிரிமியம் டச் உடன் டீட்டெயில் அதிகமாக உள்ளதுபடி இந்தவாகனம் வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த காரின் உட்பகுதியில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்,பின்பக்க ஏசி பென்ட்கள் உள்ளிட்டஅம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
9. ஒரு கார் ஒரு உலகம் திட்டம்
நிஸான் நிறுவனம் ஒரு கார் ஒரு உலகம் என்ற திட்டதை உருவாக்கியது. இதன் அடிப்படையில் மேக்னைட் காரைா உருவாக்கியுது. இந்த திட்டத்தின் 2ம் காராக டேக்டான் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரெனால்ட் ஆலையில் தயாராகிறது. இந்த ஆலையில் தற்போது 4,80,000 கார்களை தயாரிக்க முடியும். இதில் 2.40 லட்சம் கார்கள் நிஸான் பிராண்டில் தயாராகிறது. ஆனால் இதில் பாதியை கூட அந்நிறுவனம் பயன்படுத்த வில்லை தற்போது ஆண்டிற்கு 1 லட்சத்திற்கும் குறைவான வாகனங்கள் தான் இந்த ஆலையில் நிஸான் பிராண்டில் தயாராகிறது.
10.எப்பொழுது வெளியாகும்
தற்போது இந்த காரின் தயாரிப்பிற்கு முந்தைய அல்லது புரோட்டோ டைப் காரின் புகைப்பத்தை தான் அந்நிறுவனம்வெளியிட்டுள்ளது. இந்த கார் விரைவில் தயாரிப்பிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் 2026ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பவனை செய்யவில்லை என்றாலும் படிப்படியாக கார்களை புதிதாக களம் இறக்கினால் இதனால் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









