யாருடைய படம் வேணும்னாலும் ரிலீஸ் ஆகட்டும்... 2026 பொங்கல் வின்னர் இந்த டாடா கார் தான்!! இப்பவே சொல்லிடலாம்

டாடா பன்ச் (Tata Punch) காரின் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்சனின் அறிமுகம் தான் தற்சமயம் கார் மார்க்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஒன்றாக உள்ளது. புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக தேதியை இன்னும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், வருகிற 2026 ஜனவரி மாத மத்தியில் இந்த புதிய டாடா கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால், பொங்கல் (Pongal) சமயத்தில் புது காரை வாங்க நினைப்பவர்களை டார்க்கெட் செய்து 2026 பொங்கலின் போது பன்ச் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்படலாம். 2024 செப்டம்பரில் பன்ச் காரின் வேரியண்ட்கள் மற்றும் உபகரணப் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தற்போது 2026 டாடா பன்ச் மாடல் பெரிய மேம்பாடுகளுடன் வரவிருக்கிறது.

2026 tata punch facelift specifications

சமீபத்திய ஸ்பை படங்கள் (Spy Images) மூலம், 2026 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புறத் தோற்றம், தற்போதுள்ள பன்ச் காரை விட மிகவும் நவீனமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. 'பன்ச் இவி' எலெக்ட்ரிக் காரின் ஸ்டைலிங் அம்சங்கள் இதில் பிரதிபலிக்கலாம். ஸ்பை படங்களில், திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் புதிய ஹெட்லைட்களை காண முடிந்தது.

இந்த ஹெட்லைட்கள் 'பன்ச் இவி' எலெக்ட்ரிக் காரை ஒத்த வடிவமைப்பில் இருந்தன. மெலிதான வடிவிலான பகல்நேர ரன்னிங் லைட்களும் (DRL) இடம்பெறும். ஆனால் 'பன்ச் இவி' காரில் உள்ள ஹெட்லைட்களை இணைக்கும் LED லைட் பார் அம்சம் இல்லாமல் இருக்கலாம். ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், பன்ச் காரின் முன் & பின்பக்கத்தை தவிர்த்து காரின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது.

2026 tata punch facelift specifications

இதனால் காரின் உயரமான பக்கவாட்டுத் தோற்றம் மற்றும் குட்டையான ஓவர்ஹாங்குகள் அப்படியே தொடரப்படும் என்றே தெரிகிறது. எனினும், டாப் வேரியண்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் சக்கரங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய கலர் ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தலாம். முன்பு வெளியான ஸ்பை படங்களில், நீல நிற உடற்பகுதி மற்றும் வெள்ளை நிற மேற்கூரை உடன் பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் தெரிந்ததால், இவை புதிய கலர் காம்பினேஷன்களாக இருக்கலாம்.

காரின் பின்புறத்தில், ஃபிளக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகளுடன் டிசைன் மாற்றப்பட்ட பம்பர் இடம்பெற வாய்ப்புள்ளது. புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறத்தில், நடுவில் ஒளிரும் லோகோவுடன் கூடிய புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் இடம்பெற உள்ளது. உயர்தர வேரியண்ட்கள், 'டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்' மற்றும் 'பன்ச் இவி' கார்களில் உள்ளதைப் போன்ற 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறலாம்.

மேலும், தொடர்-உணர் பொத்தான்கள் மற்றும் சுழற்றக்கூடிய இரண்டு டோகிள்களுடன் கூடிய 'பிஜிட்டல்' (Phygital) HVAC பேனல் எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியன்ட்களில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் இடம்பெறலாம். 'பன்ச் இவி' எலெக்ட்ரிக் காரில் ஏற்கனவே உள்ள இந்த அம்சம் ஆனது பெட்ரோல் பன்ச் காரில் ஒரு வரவேற்கத்தக்க கூடுதல் இணைப்பாகும். தற்போதுள்ள பன்ச் காரில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் நிலையில், புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் 360-டிகிரி கேமராவும் சேர்க்கப்படலாம்.

2026 tata punch facelift specifications

வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே (Apple CarPlay) & ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto), வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பின் இருக்கைகளுக்கு ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், குரல் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய சன்ரூஃப், தன்னிச்சையாக மடங்கும் ORVM-கள் மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற அம்சங்களும் இருக்கும்.

என்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, 2026 ஃபேஸ்லிஃப்ட் மாடல், தற்போதைய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் ரெவோட்ரான் என்ஜினைத் தக்க வைத்துக் கொள்ளும். இது பெட்ரோல் வெர்ஷனில் 88எச்பி பவர் மற்றும் 115என்.எம் டார்க் திறனையும், சிஎன்ஜி (CNG) மாடலில் 73.5எச்பி பவர் மற்றும் 103என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும்; அதேநேரத்தில் பெட்ரோல் வேரியண்ட்களை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மார்க்கெட்டை அதிர வைக்க போகும் கார்களுள் புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் முக்கியமானது. 2026 டாடா பன்ச் காரின் விலை, வேரியண்ட்டை பொறுத்து ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய 'பன்ச்' கார் ரூ.5.50 லட்சம் முதல் ரூ.9.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை சுமார் ரூ.6 லட்சம் ஆகவும், டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.9.50 லட்சம் வரையிலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GST 2.0 பன்ச் காருக்குக் கட்டணத்தைக் குறைத்திருந்தாலும், ஃபேஸ்லிஃப்ட் மற்றும் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் காரணமாக விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற பொங்கலுக்கு இந்த காரின் புக்கிங்குகள் துவங்கப்பட்டால், நிறைய பேர் போட்டிப் போட்டு புக் செய்வார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 30, 2025, 5:00 [IST]
English summary
2026 tata punch facelift specifications that expected to launch on coming pongal season
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X