டாடாவில் இந்த கார் வந்த பிறகு மொத்த கதையும் மாறிடும்! பலரது ஃபேவரட் ஆக மாற போகும் கார் சோதனை ஓட்டம்!

புதிய தோற்றப்பொலிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப மாதங்களாக பலமுறை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, 2026 பன்ச் காரின் ஸ்பை படங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்பை படங்கள் காரின் முன், பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

இதன்படி பார்க்கும்போது, புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன் பகுதி பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கிரில் மற்றும் அதனை சுற்றியுள்ள விளக்குகள் இதில் அடங்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பன்ச் இவி (EV) எலெக்ட்ரிக் காரைப் போலவே இந்த விளக்குகள் இருக்கும் எனத் தெரிகிறது. கிரில்லுக்கு மேலே உள்ள LED DRL-கள் மற்றும் முக்கோண வடிவில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள் கவனிக்கத்தக்கவை.

2026 tata punch facelift spotted

கிரில்லின் வடிவமைப்பு அதனுள் ஸ்லாட்டுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்லிஃப்ட் காரின் தனித்துவமான அம்சமாக இருக்கும். கீழ் கிரில் இப்போது செவ்வக வடிவத்தில் உள்ளது. நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட ஸ்லாட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய பன்ச் காரில் காணப்படும் வளைந்த மற்றும் மெஷ் வகை ஸ்லாட்களில் இருந்து வேறுபடுகிறது.

2026 பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் இன்னும் பல சிறிய மாற்றங்கள் முன்பகுதியில் மறைக்கப்பட்டிருக்கலாம். பக்கவாட்டுத் தோற்றம் பெரும்பாலும் பழைய மாடலைப் போலவே இருக்கும். இருப்பினும், புதிய அலாய் சக்கரங்கள் பன்ச் ஃபேஸ்லிஃப்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, 360° கேமரா புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் அறிமுகப்படுத்தப்படலாம்.

2026 tata punch facelift spotted

தற்போதைய பன்ச் காரில் சதுர வடிவ வீல் ஆர்ச்கள், C-தூணில் பொருத்தப்பட்ட பின் கதவுக்கான கைப்பிடிகள், பாடி கிளாடிங், டோர் டிரிம், கருப்பு நிறத் தூண்கள், சாய்வான மேற்கூரை, ஸ்டைலான ரூஃப் ரெயில்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா போன்ற அம்சங்கள் உள்ளன. பின்பகுதியில், பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் அதிக சாய்வான விண்ட்ஸ்கிரீனைக் கொண்டுள்ளது.

காரின் பின்பக்கத்தில் புதிய பூட் லிட் மற்றும் பம்பர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் காரில் புதுப்பிக்கப்பட்ட லைட்டிங் அமைப்பும் இதில் இருக்கலாம். சில பன்ச் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்களில் டெயில் லேம்ப்கள் இரண்டும் இணைக்கப்பட்டு வழங்கப்படலாம். உட்புறத்திலும் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 7 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் ஆகியவை இதில் அடங்கும்.

2026 tata punch facelift spotted

முந்தைய ஸ்பை படங்களில், பன்ச் ஃபேஸ்லிஃப்டின் உட்புறத்தில் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் காணப்பட்டது. இது மற்ற புதிய டாடா கார்களில் காணப்படுவது போல, ஒளிரும் டாடா லோகோவுடன் இருக்கலாம். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, தற்போதைய பன்ச் காரில் இரண்டு ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக வழங்கப்படுகின்றன. பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 6 ஏர்பேக்குகள் ஸ்டான்டர்ட் அம்சமாக எதிர்பார்க்கப்படுகின்றன.

பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற பிரீமியம் அம்சங்கள் புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரின் சில வேரியண்ட்களில் வழங்கப்படலாம். தற்போதுள்ள பன்ச் காரில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப் ஆகியவை உள்ளன.

2026 tata punch facelift spotted

மேலும், பன்ச் காரில் குரல் உதவியுடன் இயங்கும் எலக்ட்ரிக் சன்ரூஃப், பின் AC வென்ட்கள், ஃபாஸ்ட் USB சார்ஜர் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற அம்சங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதுள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் உடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 87.8 PS ஆற்றலையும், 115 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக இருக்கும் டாடா பன்ச் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை டாடா நிறுவனம் வழங்கவுள்ளது. இது, மார்க்கெட்டில் பன்ச் காரின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். இருப்பினும், எதிர்பார்த்ததை போல் காரின் என்ஜினில் கை வைக்கப்படவில்லை. இதனால், வழக்கம்போல் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் புதிய பன்ச் காரிலும் தொடரப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 25, 2025, 10:52 [IST]
English summary
2026 tata punch facelift spotted while testing ahead of launch check all details here
மேலும்... #tata motors #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X