சீன பொருட்களுக்கு நம்ம ஆளுங்க மட்டும்தான் தடை விதிக்குறாங்க! வெளிநாடுகள் எப்படி ஏமாறுகின்றன? தெரியலயே
உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் பெரிதும் ஆதிக்கம் செலுத்திவரும் நாடு என்று பார்த்தால், அது சீனா ஆகும். அமெரிக்கா கூட அதற்கு அடுத்துதான் வருகிறது. நம் இந்தியா உடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் அண்டை நாடான சீனா பல நிலைகளை கடந்து இன்று உலகின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நிற்கிறது. அப்படி எத்தனை பேர் சீனாவின் எலக்ட்ரிக் கார்களை வாங்குகின்றனர் என்பதை பற்றியும், உலகளவிலான எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சீனாவின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும் புள்ளி விபரங்கள் உடன் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
மற்ற எந்த நாடுகளையும் போல் இல்லாத வகையில், சீனாவில் மக்களுக்கான கார்களை அரசாங்கமே உற்பத்தி செய்துக் கொடுக்கிறது. அதாவது, கார்களை உற்பத்தி செய்வதற்காகவே பொது நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் ஏற்கத்தக்க விலைகளில் கார்களை உற்பத்தி செய்து பொது மக்களுக்கு சீன அரசு விற்பனை செய்து வருகிறது.

இது இல்லாமல், பல தனியார் நிறுவனங்களும் அங்கு செயல்படுகின்றன. சீன கார் நிறுவனங்கள் சீனாவை தாண்டி பல வெளிநாடுகளில் தங்களது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளன. பிரம்மாண்டமான கார் சந்தையாக பெருங்கடல் போல் சீனா இருந்தாலும், சிறு சிறு ஏரிகளிலும் மீன் பிடிக்க சீன கார் நிறுவனங்கள் ஆசைப்படுகின்றன.
நம் இந்தியாவிலும் பிஒய்டி (BYD) என்கிற சீன கார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், சீனாவுக்கு அடுத்து உலகின் 2வது மிக பெரும் கார் சந்தையாக விளங்கும் அமெரிக்காவில் ஒரு சீன எலக்ட்ரிக் கார் கூட விற்பனை செய்யப்படுவது இல்லை என்பது ஆச்சிரியமாக உள்ளது.

ஆனால், அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) நிறுவனம் சீனாவில் தொழிற்சாலை உடன் செயல்படுகிறது. உலகளவிலான எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) கார்கள் விற்பனையில் சீன கார் நிறுவனங்கள் 100இல் சுமார் 76% பங்களிப்பை கொண்டுள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த ரோ மோஷன் (Rho Motion) என்கிற நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, உலகில் எலக்ட்ரிக் கார் & பிளக்-இன் ஹைப்ரீட் கார்களை வாங்குவோரில் 4இல் 3 பேர் சீன கார் நிறுவனங்களில் இருந்து வாங்குவதாக இங்கிலாந்து நிறுவனத்தின் இந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. ஐரோப்பாவிலும் சில சீன எலக்ட்ரிக் கார் பிராண்ட்களுக்கு கணிசமான மார்க்கெட் உள்ளது.

குறிப்பாக, ஜெர்மனியில் கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த 5 லட்சத்து 78 ஆயிரம் கார்களுள் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 4% ஆகும். இவ்வாறு ஐரோப்பாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதுமே சீன எலக்ட்ரிக் கார்களுக்கு பல்வேறு நாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் எலக்ட்ரிக் கார் சந்தைகளில் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு, சீன அரசாங்கத்தின் உதவியும் இல்லாமல் இல்லை. கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 231 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு சீன அரசு மானியங்களை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









