2026ல கார் வாங்க போறீங்களா? 3 தரமான கார்களை களம் இறக்கும் மஹந்திரா!
வரும் 2026ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் 3 எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த கார்கள் தற்போது அறிமுகத்திற்கு தயாராகி வருகின்றன. இதில் நான்கு மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி கார்களும் அடங்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த பட்டியலில் முதல் காராக மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ என்ற கார் இருக்கிறது. இந்த கார் ஏற்கனவே விற்பனையாகி வரும் எக்ஸ்யூவி 700 என்ற காரின் பேஸ்லிஃப்ட் மாடலாகும். இந்த கார் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி விற்பனைக்காக அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது. ரூ21 ஆயிரம் முன்பணம் செலுத்தி இந்த காரையும் எப்போது புக் செய்ய முடியும்.

இந்த புதிய எக்ஸ்யூவி 700 காரில் வெளிப்புறம் பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. முக்கியமான ஷார்ப்பான ஹெட்லைட்டுகள் 6 ஸ்லாட் கொண்ட கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், 19 இன்ச் அலாய் வீல், பின்புற டையில் லைட் வடிவமைப்பில் மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் காரின் உட்பகுதியிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ் போர்டுகள் 12.3 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே, இரண்டு ஸ்போக் ஸ்டியரிங் வீல், புதிய பிரெளன் ஸ்கீம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.
மேலும் இந்த காரின் உட்பகுதியில் முன் பக்க பயணிகள் சீட்டில் 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் சீட்டுகள் பொருத்தப்பட உள்ளன. மேலும் ஆர்கியுமென்ட் ரியாலிட்டியுடன் கூடிய ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட் மற்றும் இரண்டாவது வரிசை சீட்டுகள் டூயல் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை இதில் புதிதாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸில் எக்ஸ்யூவி 700 காரில் உள்ள அதே செட்ட்ப் தான் இதிலும் இடம் பெற வாய்ப்புள்ளது.

அடுத்ததாக வரும் மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம் தனது ஸ்கார்பியோ என் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார் முதல் முறையாக கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமானது. அதன் பிறகு தற்போது தான் முதல் பேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகமாகிறது. இந்த அப்டேட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர்கள், புதிய ஹெட்லைட் கிராபிக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்லாட் கொண்ட கிரில், 17 இன்ச் அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்கள் வெளிப்புறத்திலும், 10.25 இன்ச் டேஷ்போர்டு டிஸ்ப்ளே புதிய உட்புற மெட்டீரியல் மற்றும் புதிய காஸ்ட்யூம் அப்டேட்ட உடன் உட்புற வடிவமைப்பு எல்லாம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லாமல் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

அடுத்ததாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரில் புதிய காஸ்மெட்டிக் அப்டேட்கள் வர உள்ளன. இது குறித்த வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த அப்டேட்டில் விஷுவலாக சில மாற்றங்கள் இடம் பெற உள்ளன. முக்கியமாக பை எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள் பொருத்தப்படுகிறது. புதிய ஆர்எஸ் லார்ட் கிரில் மற்றும் 19 இன்ச் அலாய் வீல் ஆகிய பொருத்தப்படுகின்றன. தார் ராக்ஸ் காரில் உள்ள அம்சம் எல்லாம் இந்த காரில் இடம் பெறுகிறது. இதுபோக இந்த காரில் முன்பக்க சீட் வெண்டிலேட்டட் சீட்டுகளாகவும் பவர் ஃபோல்டிங் ஓவர்விஎம், பாசிவ் கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோ டிம்மிங் ஐ ஆர் வி எம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், இன்ஜின் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறுகிறது. இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்களில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் சிறப்பாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், 2026ம் ஆண்டு நிறுவனம் புதிய கார்களை அடுத்தடுத்து களம் இறக்க உள்ளதால் இந்நிறுவனத்தின் மீதான கவனம் அதிகமாக இருக்கிறது.
நிச்சயம் 2026ம் ஆண்டு இரண்டாம் பாதியில் அடுத்த சில கார்கள் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications









