35 கி.மீ மைலேஜ் தரும் காரெல்லாம் வருது! அற்புதமான 5 கார்கள் இது தான்!
இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு மார்கெட்டில் தற்போது உள்ள டிரெண்ட் பலருக்கும் தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் அதிக மைலேஜ் தரும் ஹைபிரிட் கார்களம் அதிக மோகம் கொண்டதாக இருக்கிறது. இதன்படி அடுத்த 8-12 மாதங்களில் 5 புதிய ஹைபிரிட் கார்கள் அறிமுகமாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி எஸ்குடோ:
மாருதி நிறுவனம் தனது புதிய மிட்சைஸ் எஸ்யூவி காராக எஸ்குடோ காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் 3ம் தேதி விற்பனைக்கு அறிமுகமாகியது. இந்த கார் கிராண்ட் விட்டாரா காரை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பெப்டரோல், ஸ்டிராங்க் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. அதே நேரத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் ஹைபிரிட் வெர்ஷனை உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்த காரும் மாருதி எஸ்குடோ என்ற காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.
டஸ்டர் ஹைபிரிட்:
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வாகனங்களை களம் இறக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிறுவனம் புதிய டஸ்டர்காரை ஹைபிரிட் ஆப்ஷன் உடன் 2026ம் ஆண்டு இந்த கார் சிஎம்எஃப் பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் பொருத்தப்ப்டடுள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க ஹேண்டா நிறுவனம் தனது சிட்டி காரில் உள்ள ஹைபிரிட் சிஸ்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. அதன்படி அதன் எலெவேட் காரின் ஹைபிரிட் வெர்ஷனை விரவில் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்படும்.
அடுத்தாக மாருதி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனம் அதில் ஹைபிரிட் வெர்ஷனை ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் 1.2 லிட் இசட் 12இ பெட்ரோல் இன்ஜினை கொண்டு உருவாக்கப்படுகிறது. இ்நத கார் லிட்டருக்க 35-40 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக மைலேஜ் தரும் கார்கள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இந்த கார்கள் நிச்சயம் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக மைலேஜ் தருவது மட்டுமல்லாமல் அதிக அளவில் இந்த வாகனங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் இது அதிக மைலேஜை தருவதால் பெட்ரோல் செலவும் குறைவாக வைக்கும். பலர் இந்த ரக வாகனங்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் பலர் இந்த கார்களை அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் வரிசையாக வாகனங்கள் அறிமுகமாகிறது. இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









