40 கி.மீ மைலேஜ் தரும் கார் ரெடி! இது மட்டுமல்ல மொத்தம் 5 கார் வருது!
மாருதி நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள் பல எஸ்யூவி கார்களை களம் இறக்க தயாராகி வருகிறது. இதில் 5 கார்களின் வருகைதற்போது உறுதியாகியுள்ளது. ஒரு காலத்தில் மாருதியிடம் போதுமான எஸ்யூவி கார்கள் விற்பனையில் இல்லை. இதனால் இந்த செக்மெண்டில் விற்பனை குறைவான எண்ணிக்கையில் இருந்த விமர்சனங்களை மாற்றி தற்போது அதிக எஸ்யூவிகளை களம் இறக்க தயாராகி வருகிறுது. இது குறித்த விரிவான விமர்சனங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி விக்டோரியஸ்:
மாருதி நிறுவனம் சமீபத்தில் தான் தனது விக்டோரியஸ் என்ற காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் கிராண்ட் விட்டாரா காரைவிட கீழே பொசிஷன் செய்யப்பட்டுள்ளத. இந்த கார் அரேனா டீலர் ஷிப் வழியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூ10 -18 லட்சம் என்ற விலையி்ல விற்பனையாகி வருகிறது. இதில் பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளன. லெவல் 2 அடாஸ், பவர்டு டெயில் கேட், எச்யூடி, டுயல் பேன் சன்ரூஃப் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

மாருதி இ-விட்டாரா:
மாருதி தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி தயாராகி வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தகாரின் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் இந்த காரை ஹார்ட்ரெக்ட் பிளாட்ஃபார்மில் தயாரிக்கிறது. இந்த கார் இரண்டு விதமான பேட்டரிபேக் உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழிற்நுட்பத்தையும் சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 500 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நெக்ஸா டீலர் ஷிப் மூலம் விற்பனைக்கு வருகிறது.
3. 7 சீட்டர் கிராண்ட் விட்டாரா:
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் 3 வரிசை சீட்டர் கொண்ட 7 சீட்டர் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள டாடா சஃபாரி, மஹிந்திரா எக்ஸ்இவி 700 ஆகிய காருக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த கார் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

4. மாருதி மைக்ரோ எஸ்யூவி:
மாருதி நிறுவனம் டாடா நிறுவனத்தின் பஞ்ச் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் ஆகிய காருக்கு போட்டியாக மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் புதிய கார் ஒன்றை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி இ்நத காரை 2026 அல்லது 2027ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது விற்பனையாகும் எஸ்யூவி கார்களை விட குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த காரில் அதிக மைலேஜிற்காக மாருதி உருவாக்கி வரும் ஹைபிரிட் தொழிற்நுட்பம் இதில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் ஸ்டிராங்க் ஹைபிரிட்டில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 40 கி.மீ மைலேஜ் குடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
5. மாருதி ஃபிராங்க்ஸ்:
மாருதி நிறுவனம் இந்தியாவில் ஃபிராங்க்ஸ் என்ற கூபே ஸ்டைல் எஸ்யூவி காரை விற்பனை செய்து வரகிறுது இந்த காரின் அடுத்த அப்டேட்டாக ஹைபிரிட் சிஸ்டத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ஹைபிரிட் ஃபிராங்க்ஸ் கார் இந்தியாவில் பல இடங்களில் சோதனை செய்யப்படுகிறது. இதனால் அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த கார் மாறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த மாருதி டிசையர் ஏற்றுமதி காரில் உள்ள ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை புகுத்துகிறது. இதனால் சிறந்த மைலேஜ் தரும் வாகனமாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் ஃபிளக்ஸ் ஃப்யூயல் தொழிற்நுட்பத்தையும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது. இது மட்டுமல்ல அடுத்த ஆண்டு மாருதி தனது அனைத்து மாடல் கார்களிலும் ஃபிளக்ஸ் ஃப்யூயல் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி எஸ்யூவி செக்மெண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தொடர்ந்து களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதில் குடும்பத்துடன் பயணிக்கும் கார், குறைந்த விலை கார், அதிக மைலேஜ் தரும் கார் என பல செக்மெண்டில் கார் இறங்குவதால் அடுத்தாண்டிற்குள் எஸ்யூவி விற்பனையில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









