தீபாவளிக்கு இப்பவே காசை ரெடி பண்ணுங்க! 5 புதிய கார் வரப்போகுது!
இந்திய மார்கெட்டில் எஸ்யூவி கார்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பாதிக்கும் மேல் எஸ்யூவி ரக கார்களாக உள்ளன. இந்நிலையில் வரும் தீபாவளியை மனதில் வைத்து பலர் புதிய கார்களை வாங்க முடிவு செய்து வருகின்றனர். அப்படியாக வாங்க நினைப்பவர்களுக்கு தீபாவளியை குறி வைத்து 5 புதிய எஸ்யூவி கார்கள் மார்கெட்டில் களம் இறங்குகிறது. இந்த கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணாலாம் வாருங்கள்.
மஹிந்திரா பொலிரோ நியோ ஃபேஸ்லிஃப்ட்:
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான பொலிரோ நியோ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உரவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த கார் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் டெலிவரி தீபாவளி நேரத்தில் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் தீபாவளிக்கு புதிய காரை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும்.

இந்த காரில் வட்டமான ஹெட்லைட், புதிய ஃபாக் லைட்டுகள், புதிய வடிவமைப்பில் உள்ள பம்பர். காருக்குள் புதிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய டேஷ்போர்டு லே அவுட், புதிய சீட்டுகள், ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இன்ஜினை பொருத்தவரை தற்போது விற்பனையாகும் மாடலில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.
மாருதி எஸ்குடோ:
மாரதி நிறுவனம் தனது எஸ்குடோ காரை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இந்நிறுவனம் இவிஎக்ஸ் என்ற பெயரில் தயாரித்து பின்னர் இ-விட்டாரா என்ற பெயரில் வெளியிடதிட்டமிட்டிருந்த காரை தற்போது இ-எஸ்குடோ என அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் முதலில் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் பின்னர், பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைரிபிரட் வெர்ஷனிலும் விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்:
ஹூண்டாய் நிறுவனம் தனது பிரபலமான காரான வென்யூ என்ற காரின்ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனவை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுவதை பல நேரங்களில் பார்க்க முடிகிறது.இந்நிலையில் தீபாவளியை குறி வைத்து இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
இந்த காரில் வெளிப்புறமும், உட்புறமும் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. முக்கியமாக பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்டுகள், அப்டேட் செய்யப்பட்ட அடாஸ் தொழிற்நுட்பம், ஆகிய இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இன்ஜினில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்
டாடா நிறுவனம் தனது பஞ்ச் மற்றும் பஞ்ச் இவி ஆகிய கார்களை வரும் அக்டோபர் மாதம் அப்டேட் செய்து வெளியிடும் என எதிர்பர்க்கப்படுகிறது. பெட்ரோல் பஞ்ச் காரி்ல சில டிசைன் மாற்றங்கள் பஞ்ச் இவி காரில் உள்ளதை போல இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இந்தகாரில் பெரிய டச் ஸ்கிரன், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் புதிய அல்ட்ராஸ் காரில் உள்ளதை போல இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்த காரில் பெட்ரோல் மற்றும் இவி வெர்ஷன்களில் பவர்டெரைன் ஆப்ஷன்கள் அப்படியே காரில் உள்ளதைபோலவே இடம் பெற வாய்ப்புள்ளது இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த காருக்கு இந்த அப்டேட் நிச்சயம் தேவையான ஒன்றாக இருக்கிறது.

டாடா சியாரா:
டாடா நிறுவனம் தனது பிரபலமான சியாரை காரை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த காரும் தீபாவளியை குறி வைத்து விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படவாய்ப்புள்ளது.
இந்த காரில் டர்போ இன்ஜினை பொருத்தும் எண்ணமும் டாடா விற்கு இருக்கிறது. இது பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என எதரி்பார்க்கலாம். இந்த காரில் இவி வெர்ஷன் கூட எதிர்காலத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த காரில் ஹாரியர் இவியில் பவர் டெரைன் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளி நேரத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகும் என்பதால் பல நிறுவனங்கள் தீபாவளிக்கு பல புதிய கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகின்றனர். முக்கியமாக எஸ்யூவி செக்மெண்ட் அதிகமாக விற்பனையாவதால் இந்த ரக கார்கள் அதிகம் அறிமுகமாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









