ஷோரூமில் நிறுத்த இடம் இல்லை... மஹிந்திராவின் இந்த புதிய காரை வாங்க கூட்டம் அள்ளுது!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் (XUV 3XO RevX Edition) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் புதிய ஸ்பெஷல் எடிசனாக ரெவ் எக்ஸ் கடந்த ஜூலை 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த புதிய ஸ்பெஷல் எடிசனின் அறிமுகத்தினால் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விற்பனை அதிகரிக்கும் என நாம் எதிர்பார்த்ததை போலவே, குறிப்பிட்ட மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) ஒன்று ஒரே நாளில் சுமார் 51 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் கார்களை முன்பதிவு (Book) செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது.

mahindra showroom car delivery

மத்திய பிரதேச மாநிலம், சட்னா என்கிற பகுதியில் செயல்படும் இந்த மஹிந்திரா ஷோரூம் 51 எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்வதை ஒரு சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்து சிறப்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தின் முக்கிய வாசல் பகுதியில் ரிப்பன் கட்டி அதனை வாடிக்கையாளர்கள் முன்னிலையில் வெட்டி இந்த கார் டெலிவிரி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

51 கார்கள் டெலிவிரி செய்யப்பட்டதால் அவற்றை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என பெரிய கூட்டம் கூடியுள்ளது. இருப்பினும், கஸ்டமர்கள் புக் செய்த எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் கார்களை அவர்கள் தேர்வு செய்த வேரியண்ட் மற்றும் நிறத்தில் மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகள் சரியாக பிரித்து வழங்கினர்.

mahindra showroom car delivery

எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் கார் மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எம், எம் (ஆப்ஷ்னல்), ஏ மேனுவல் மற்றும் ஏ ஆட்டோமேட்டிக் என்பன அந்த 4 வேரியண்ட்கள் ஆகும். இதில், எம் வேரியண்ட்கள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் வழக்கமான எம்.எக்ஸ்2 வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.

ஆனால், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எம்.எக்ஸ்2 காரை காட்டிலும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் எம் வேரியண்ட்களில் அதிக தொழிற்நுட்ப வசதிகளை பெறலாம். இதற்கேற்ப விலையும் ரூ.60,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் காரின் எம் மற்றும் எம் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்கள் இரண்டிலும் 111 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

mahindra showroom car delivery

எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் காரின் எம் வேரியண்ட்களை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் ஏ வேரியண்ட்கள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஏ.எக்ஸ்5 (AX5) என்கிற மிட்-வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால், ஏ.எக்ஸ்5 வேரியண்ட்டை காட்டிலும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரெவ் எக்ஸ் எடிசன் காரின் ஏ வேரியண்ட்களில் ஆற்றல்மிக்க என்ஜினை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விற்பனை சிறப்பானதாகவே இருந்து வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாகவே ரெவ் எக்ஸ் என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மற்ற எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களில் இருந்து தனித்து தெரிய விரும்புபவர்கள் ரெவ் எக்ஸ் எடிசன் காரை வாங்கலாம். இருப்பினும், இந்த ஸ்பெஷல் எடிசன் கார் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால் விரைவாக காரை புக் செய்வது நல்லது.

Source: Cartog (https://www.cartoq.com/)

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 13:59 [IST]
English summary
51 customers takes delivery of xuv 3xo revx edition in one mahindra showroom in single day
மேலும்... #mahindra #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X