சிஎம் பேரனே நெனச்சாலும் இந்த மாருதி கார இப்ப வாங்க முடியாது! ஆனா மொத்த உலகத்துக்கே இந்தியால இருந்துதான் போகுது
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைதான், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உலகளாவிய உற்பத்தி மையமாக திகழ்கிறது.

இங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கு, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கின. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்), 6,068 மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள், சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள், அதிக அளவில் சென்றுள்ளன. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகிறது.

இருப்பினும் நடப்பு 2025-26ம் நிதியாண்டு முடிவடைவதற்கு உள்ளாக, அதாவது வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) கார், இதன் நேரடி போட்டி மாடலாக இருக்கும்.
இதுதவிர மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படவுள்ளன.
அவை 49 kWh மற்றும் 61 kWh ஆகிய பேட்டரிகள் ஆகும். வசதிகளை (Features) பொறுத்தவரை, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் பிஎம் 2.5 ஏர் பில்ஃடர் போன்றவை எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் மிகவும் முக்கியமான வசதிகள் ஆகும்.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரை, லெவல் 2 அடாஸ், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இதுதவிர 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளும் கூட, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்களையும், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில், பிரதமர் நரேந்திர மோடிதான் (Narendra Modi), மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளை தொடங்கி வைத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








