காரை உருவாக்குனவங்க பலர் இப்போ உயிரோட இல்ல! 61 வருஷத்தில் எத்தனை கஸ்டமர்களை பார்த்திருக்கும்...

ஃபோர்டு மோட்டார் (Ford Motor), அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று. ஃபோர்டு மோட்டார் உருவான சமயத்தில் தோன்றிய கார் நிறுவனங்கள் பல இப்போதும் செயல்பட்டு வருகின்றன. மெர்சிடிஸ் (Mercedes), ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) என இந்த லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த லிஸ்ட்டில் யாரும் செய்யாத சாதனையை இப்போதுவரையிலும் ஃபோர்டு நிறுவனம் செய்து வருகிறது. அதுதான் ஃபோர்டு மஸ்டங் (Mustang) கார் விற்பனை ஆகும். 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 17ல் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டங் கார் சுமார் 61 வருடங்களை கடந்து இப்போதும் உலகின் பல நாடுகளில் விற்பனையில் உள்ளது.

61 years of ford mustang

இதனாலேயே உலகளவில் பலர் அறிந்த கார்களுள் ஒன்றாக ஃபோர்டு மஸ்டங் உள்ளது. இந்த 61 வருடங்களில் இந்த ஃபோர்டு ஸ்போர்ட்ஸ் காரின் பல்வேறு ஜென்ரேஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவை என்னென்ன என்பதைதான் ஒன்றன் பின் ஒன்றாக இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

முதல் தலைமுறை: 1964ஆம் ஆண்டில் இருந்து 1973 வரையில் 9 வருட காலத்திற்கு விற்பனையில் இருந்த முதல் மஸ்டங் காரை ஃபல்கன் (Falcon) ஆல் உருவாக்கப்பட்ட யுனிபாடி (Unibody) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கினர். முதல் மஸ்டங் காரில் ஆற்றல் குறைவான என்ஜினில் இருந்து ஆற்றல்மிக்க கோப்ரா ஜெட் வி8 என்ஜின் வரையிலான என்ஜின் ஆப்ஷன்களை ஃபோர்டு வழங்கியது.

பொதுவாகவே இவ்வாறான ஸ்போர்ட்ஸ் கார் மேனுவல் கியர்பாக்ஸில் வழங்கப்படுவது கிடையாது. ஆனால், 1964இல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearboz) ஆப்ஷன்களில் மஸ்டங் காரை ஃபோர்டு அறிமுகம் செய்தது. மிக நீளமான என்ஜின் பொனெட் மூடி மற்றும் குறுகியதான பின்பக்க பூட்ஸ்பேஸ் (Boot Space)-ஐ கொண்டிருந்ததால், முதல் மஸ்டங் காரை விருப்பப்பட்டவர்கள் எளிதாக தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடிந்தது.

61 years of ford mustang

முதல் தலைமுறை ஃபோர்டு மஸ்டங் கார் விலை குறைவானதாகவும், ஸ்போர்டியான தோற்றத்தை கொண்டதாகவும் இருந்தது. இதனாலேயே இந்த காரை அன்றைய கால இளம் தலைமுறையினர் அதிகமாக வாங்கினர். வெறும் இரண்டு வருடங்களில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான முதல் தலைமுறை மஸ்டங் கார்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.

2ஆம் தலைமுறை: மஸ்டங் காரின் 2ஆம் தலைமுறை ஆனது பிண்டோ (Pinto)-சார்ந்த பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டது. இந்த மஸ்டங் காரில் ஆரம்பத்தில் 2.3 லிட்டர் ஐ4 என்ஜின் பொருத்தப்பட்ட நிலையில், 1975ஆம் ஆண்டில் புதியதாக 5 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டது. முந்தைய தலைமுறையை காட்டிலும் அதிக அலங்காரங்கள் உடன் வடிவமைக்கப்பட்ட 2ஆம் தலைமுறை மஸ்டங்கில் ரேக் & பினியன் டைப் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டில் இருந்து 1978ஆம் வரையில் என வெறும் 4 வருடங்கள் மட்டுமே விற்பனையில் இருந்த 2ஆம் தலைமுறை மஸ்டங் கார், அந்த சமயத்தில் இருந்த உலகளாவிய கச்சா எண்ணெய் பற்றாக்குறையை மனதில் வைத்து அதிக மைலேஜை வழங்கும் விதமாக குறைவான எடையில் உருவாக்கப்பட்டது. உண்மையில் 2ஆம் தலைமுறை மஸ்டங் கார் கஸ்டமர்களை வெகுவாக கவர்ந்திழுக்கவில்லை என்றாலும், அந்த சமயத்தில் நிலவிய கடுமையான சூழலில் ஃபோர்டு நிறுவனத்தை தொடர்ந்து உயிருடன் வைத்திருந்தது.

61 years of ford mustang

3ஆம் தலைமுறை: 2ஆம் தலைமுறையில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட தோற்றத்திலானதாக 3ஆம் தலைமுறை மஸ்டங் கார் உருவாக்கப்பட்டது. இந்த மஸ்டங் காரின் உடலமைப்பை 'ஃபாக்ஸ் பாடி' (Fox Body) என அழைக்கின்றனர். 1993ஆம் ஆண்டு வரையில் சுமார் 14 வருடங்களாக விற்பனையில் இருந்த 3ஆம் தலைமுறை மஸ்டங்கில் 5 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டது.

4ஆம் தலைமுறை (1994- 2004): அப்டேட் செய்யப்பட்ட ஃபாக்ஸ்-4 பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 4ஆம் தலைமுறை மஸ்டங் காரை 'எஸ்.என்95' (SN95) என அழைத்தனர். 10 வருட காலத்திற்கு விற்பனையில் இருந்த 4ஆம் தலைமுறை மஸ்டங் கார் 3.8 லிட்டர் வி6 என்ஜின் மற்றும் பல்வேறு விதமான வி8 என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது. முற்றிலுமாக பெட்டகம் வடிவில் கூர்மையான எட்ஜ்கள் உடன் உருவாக்கப்பட்டு வந்த மஸ்டங் காரின் தோற்றத்தில் 4ஆம் தலைமுறையில்தான் முதல்முறையாக வளைவுகள் வழங்கப்பட்டன.

5ஆம் தலைமுறை (2005- 2014): எஸ்197 என்கிற குறியீட்டு பெயருடன் கொண்டுவரப்பட்ட 5ஆம் தலைமுறை மஸ்டங் காரில் பழமையான மஸ்டங் கார்களில் இருந்ததை போன்றதான கிரில் பகுதி முன்பக்கத்தில் வழங்கப்பட்டது. இந்த காரில் பவர்ஃபுல்லான கோயோடே வி8 என்ஜின் ஆனது 2011ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 2013இல் மஸ்டங் காரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிடி500 வேரியண்ட் ஆனது சுமார் 662 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக பவர்ஃபுல்லான மஸ்டங் காராக விளங்கியது.

61 years of ford mustang

6ஆம் தலைமுறை (2015- 2023): ஃபோர்டு மஸ்டங் காரை உலகம் முழுக்க பிரபலப்படுத்திய பெருமை 6ஆம் தலைமுறை மஸ்டங் காரையே சேரும். இதற்கேற்ப, பின்பக்கத்தில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய சஸ்பென்ஷன் மற்றும் மேக்னேரைடு (MagneRide) சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்ற அதிநவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டன. ஈக்கோபூஸ்ட் டர்போ ஐ4 என்ஜினில் இருந்து செயல்திறன்மிக்க வி8 என்ஜின் ஆப்ஷன்கள் வரையில் 6ஆம் தலைமுறை மஸ்டங்கில் வழங்கப்பட்டன.

7ஆம் தலைமுறை (2024- தற்போதுவரை): இந்தியா உள்பட தற்சமயம் உலகின் பல நாடுகளில் விற்பனையில் இருப்பது 7ஆம் தலைமுறை மஸ்டங் கார் ஆகும். 500எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4ஆம் தலைமுறை கோயோடே வி8 என்ஜின் மட்டுமின்றி, 12.4-இன்ச் டிஜிட்டல் க்ளஸ்ட்டர், 13.2-இன்ச் செண்டர் ஸ்க்ரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன.

61 years of ford mustang

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 61 வருடங்களில் ஃபோர்டு மஸ்டங் கார் பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளதை பார்த்தோம். கார்புரேட்டட் வி8 என்ஜின் ஆப்ஷன்கள் மஸ்டங்கில் வழங்கப்பட்டது, அதனை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது எனலாம். உலகில் பல ஸ்போர்ட்ஸ் கார்கள் விற்பனையில் உள்ளன என்றாலும், பலரும் அறிந்த ஸ்போர்ட்ஸ் காராக ஃபோர்டு மஸ்டங் விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், அதன் 61 வருட வரலாறு என சொன்னால் அதில் மாற்று கருத்து இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, April 24, 2025, 9:49 [IST]
English summary
61 years of ford mustang that evolved by seven generations
மேலும்... #ford #mustang
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X